26 Nov 2016

இளைஞர் சுயதொழில் ஊக்குவிப்புக்கான உதவிகள் வழங்கி வைப்பு…

SHARE
கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் அவர்களின் இளைஞர்களுக்கான சுயதொழில் ஊக்குவிப்பு
திட்டத்தின் கீழ் உதவும் முகமாக பொருட்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று அமைச்சரின் மட்டக்கப்பு கட்சிக் காரியாலயத்தில் அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் தங்கவேல் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் அமைச்சர் உட்பட அலுவலக உத்தியோகஸ்தர்கள் உதவி பெறுவோர் எனப் பலர் கலந்து கொண்டனர். இதன் போது அமைச்சரின் தனிப்பட்ட நிதியின் மூலம் மட்டக்களப்பு பிரதேசத்தைச் சேர்ந்த இளங்கேஸ்வரன் பிரசாந்தன் என்பவருக்கு ஒரு தொகைப் பெறுமதியான மோட்டார் வாகனம் திருத்தும் உபகரணங்கள் அமைச்சர் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.

இது போன்று இதற்கு முன்னரும் பல உதவிகள் பலருக்கு அமைச்சரினால் தனிப்பட்ட நிதியின் மூலம் வழங்கி வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


SHARE

Author: verified_user

0 Comments: