26 Nov 2016

மாவளையாறு பிரதேச மக்களின் காணிப்பிரச்சினை தொடர்பில் கிழக்கு மாகாண விவசாய அமைச்சரின் நடவடிக்கையின் பேரில் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகத்தில் விசேட கலந்துரையாடல்…

SHARE
கரடியனாறு மாவளையாறு பிரதேசத்தில் மக்களின் காணிகளை வன இலாகாவினர் வசப்படுத்தியுள்ளமை தொடர்பில் அப்பிரதேச மக்கள் கிழக்கு மக்களுடன் கலந்துரையாடியதைத் தொடர்ந்து அமைச்சரின் ஏற்பாட்டில்
இது தொடர்பான விசேட கலந்துரையாடல் நிகழ்வு ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் உதயஸ்ரீதர் தலைமையில் இடம்பெற்றது.

இக்கலந்துரையாடல் நிகழ்வில் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் உட்பட கிழக்கு மாகாண பிரதித் தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார், மாகாணசபை உறுப்பினர்களான இரா. துரைரெட்ணம், ஞனமுது;து கிருஸ்ணபிள்ளை, வன பரிபாலன திணைக்கள பிரதிப் பணிப்பாளர் நபீஸ், பிராந்தி வனபரிபான அதிகாரி நடேசன், பிரதேச கிராம சேவை அலுவலகர், பிரதேச மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டார்கள்.

இதன்போது மாவளையாறு பிரதேச மக்களின் காணிப்பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன் இவை தொடர்பில் ஆக்கபூர்வமான தீர்மானங்களும் மேற்கொள்ளப்பட்டதாக கலந்துரையாடலின் பின்னர் கருத்துத் தெரிவித்த விவசாய அமைச்சர் குறிப்பட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

கரடியனாறு பிரதேசத்தில் மாவளையாறு என்கின்ற இடம் ஏற்கனவே குடியிருப்பாக இருந்தது. பின்னர் வன்செயல் காரணமாக மக்கள் அந்த இடத்தில் இருந்து குடிபெயர்ந்திருந்தர்கள். அக்காலப்பகுதியில் வன இலாகாவினர் அப்பகுதிக்குச் சென்று அது வன இலாகாவிற்குரிய இடம் என்கின்ற அடிப்படையில் அங்கு எல்லைக்கல் இடுவதற்காகச் முயற்சி செய்திருக்கின்றார்கள். அந்த இடத்தில் குடியிருந்து வேறு இடங்களுக்குச் சென்று இடம்பெயர்ந்து வாழ்ந்த மக்கள் அந்த விடயத்தினை அறிந்து அவ்விடத்திற்குச் சென்று அது தங்களுடைய காணி என்று குறிப்பிட்ட போதும் வன இலாகா அதிகாரிகள் அவர்களுடன் கடுமையாக நடந்து கொண்டார்கள். இன்றைய கலந்துரையாடலின் போது மக்கள் பலவாறாக வன இலாகா அதிகாரி ஒருவரினால் பயமுறுத்தப்பட்டதாகவும் குறிப்பிட்டார்கள். நாங்கள் இதன் அடிப்படையில் குறிப்பிட்ட வன இலாகாவினருக்கு தெரிவத்தது என்னவென்றால் மக்கள் அந்தப் பிரதேசத்தினைக் கைவிட்டிருக்கவில்லை ஏற்கனவே அவர்கள் குடியிருந்த இடம் அது. ஏற்கனவே இருந்த வனஇலாகா உத்தியோகஸ்தர்கள் மக்களைப் பயமுறுத்தியே பல செயற்பாடுகளைச் செய்திருக்கின்றார்கள் இதன் அடிப்படையில் வன இலாகா அங்கு மர நடுகைக்கான ஒப்பந்தங்கள் செய்து மரமும் நட்டிருக்கினள்றார்கள் அப்போதும் கூட அதுவும் கைவிடப்பட்ட நிலையில் காடுகள் வளர்ந்து காணப்படுகின்றது. 

தற்போதைய கலந்துரையாடலின் அடிப்படையில் ஏற்கனவே மக்கள் குடியிருந்த பிரதேசங்கள் அனைத்தும் குடி நிலங்களாகக் கருதி வன இலாகா அதிலிருந்து வெளியேற வேண்டும் என்றும், வன இலாகாவிற்குரிய எல்லைக் கல்லை மாவளையாற்றின் ஓரமாக இட்டு இந்த நிலங்களை மக்களுக்கு கொடுப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் எனவும் ஒரு உடன்பாடு காணப்பட்டிருக்கின்றது. இந்த உடன்பாடு தொடர்பாக மீண்டும் மாவட்டச் செயலகத்தில் அரசாங்க அதிபரின் தலைமையில் மாவட்ட வன பரிபாலன திணைக்களப் பணிப்பாளரையும் அழைத்து இங்கு மக்களால் தெரிவிக்கப்பட்ட விடயங்கள் தொடர்பாக பரிசீலிப்பது எனவும், இது தொடர்பாக வன பரிபாலனத்தின் அமைச்சரான ஜனாதிபதி அவர்களின் கவனத்திற்குக் கொண்டு சென்று ஜனாதிபதியிடம் இருந்து வனபரிபாலன திணைக்களத்திற்கு நெறிவுறுத்தலை வழங்குவதன் மூலம் இந்த மக்களுக்கு அவர்களின் குடியிருப்பு நிலங்கை கொடுப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்று தீர்மானிக்கப்ட்டிருக்கின்றது. 

உண்மையில் இப்பிரதேசத்தில் குடியிருந்த மக்களுக்கான காணி அனுமதிப்பத்திரங்களைக் கொடுப்பதற்கான நடவடிக்கைகளை ஏறாவூர்ப்பற்று பிரதேச செயளலாளர் 2012ம் ஆண்டில் இருந்து முயற்சித்து வந்திருக்கின்றார். ஆனால் அந்த கட்டத்தில் அவரால் முடியால் போயுள்ளது. இருப்பினும் அந்த மக்களுக்கான அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கான இறுதி நடவடிக்கைகள் தற்போது எடுக்கபட்டிருக்கின்றன. நாங்கள் மேற்கொள்ளும் இந்த சந்திப்புகளின் பின்னர் மேற்கொள்ளப்படும் தீர்மானங்களின் அடிப்படையில் அவர்களுக்கு அகுனுமதிப்பத்திரங்கள் வழங்குவதற்கும் அதற்கு முன்னர் அவர்களை அவர்களது காணிகளில் குடியிருக்கச் செய்வதற்குமான ஏற்பாடுகள் மேற்கொள்வதற்கு தற்போது திர்மானித்துள்ளோம் எனவும் அவர் தெரிவித்தார். 






SHARE

Author: verified_user

0 Comments: