மட்டக்களப்பு மங்ளராமய வழகாராதிபதி அம்பிட்டிய சுமணரெத்தின தேரரின் அண்மைக்கால செயற்பாடுகளைக் கண்டித்து புதன் கிழமை (16) மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 14 பிரதேச செயலகங்களின் முன்னால் கிராம சேவை உத்தியோகஸ்தர்கள், மற்றும் பிரதேச செயலகங்களில் கடமை புரியும் அரச திணைக்களங்களின் உத்தியோகஸ்த்தர்கள்
ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக ஐக்கிய கிராம உத்தியோகஸ்த்தர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தின் செயலாளர் அரசரெத்தினம் சிறிநாதன் தெரிவித்தன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பிரதேசங்களிலும் புதன் கிழமை காலையிலிருந்து பலத்த மழை பெய்து வருகின்ற இந்நிலையிலும், கிராம உத்தியோகஸ்தர்க்ள மேற்படி தேரருக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபபட்டனர்.
அரச காணியை ஆக்கிரமிப்பது மதகுருவா? கிராம உத்தியோகஸ்த்தர்களின் பாதுகாப்பை உறுதிசெய், வேண்டாம் வேண்டாம் அடாவடித்தனம் வேண்டாம், அரச உத்தியோகஸ்த்தர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்து, போன்ற வாசகங்கங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் போரதீவுப்பற்று பிரதேச செயலக கிராம உத்தியோகஸ்த்தர்களும், ஏனைய அரச ஊழியர்களும் மண்டூர் - அம்பிளாந்துறை பிரதான வீதியை வழிமறித்து பதாகைகளை ஏந்தியவாறு கொட்டும் மழைக்கு மத்தியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஒரு மணி நேரம் இவ்வீதியின் போக்குவரத்து துண்டிக்கப்ட்டிருந்தது.
கடந்த வெள்ளிக்கிழமை (11) மட்டக்களப்பு மாவட்டம் பட்டிப்பளை பிரதேச செயலயத்திற்குட்பட்ட கெவுளியாடுடு கிராம சேவை உத்தியோகஸ்த்தரையும், பட்டிப்பளை பிரதேச செயலக அதிகாரிகளையும், மட்டக்களப்பு மங்ளராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமணரெத்தின தேரர் தாகத வார்த்தைப் பிரயோகங்களைப் பாவித்து திட்டித் தீர்த்தும், தமிழர்கள் எல்லாம் புலிகள், தமிழ் மக்கள் மேச்சல் தரைகளாகப் பயன்படுத்தும் காணிகளை சிங்கள மக்களுக்கு வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 Comments:
Post a Comment