மட்டக்களப்பு - காத்தான்குடி பிரதான வீதி, ஹிஸ்புல்லாஹ் மண்டபத்திற்கு முன்பாக சனிக்கிழமை இரவு 9 மணியளவில் இடம்பெற்ற வீதி விபத்தில் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதில் காத்தான்குடியிலுள்ள பள்ளிவாயல் ஒன்றில் காவலாளியாகக் கடமை புரியும் எம். நூர் முஹம்மத் (வயது 70) மற்றும் பாதணி தொழிற்சாலையில் பணிபுரியும் எம். முஹம்மத் சஹ்தி (வயது 20) ஆகியோர் காயமடைந்துள்ளனர்.
வீதியைக் கடக்க முற்பட்ட வயோதிபர் மீது இளைஞன் செலுத்திச் சென்ற மோட்டார் சைக்கிள் மோதுண்டதாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
இதில் காயமடைந்த இருவரும் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.
பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுப்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
0 Comments:
Post a Comment