மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட முனைக்காடு விவேகானந்த வித்தியாலயத்தில் சாதனையாளர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு வித்தியாலய அதிபர் மூ.சிவகுமாரன் தலைமையில் வியாழக்கிழமை (03) நடைபெற்றது.
இதன்போது கல்விப் பொதுத்தராதர சாதாரணதரம்இ உயர்தரம்இ தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களும்இ அதிக நாட்கள் பாடசாலைக்கு சமூகமளித்த மாணவர்கள்இ நேரத்திற்கு சமூகமளிக்கும் ஆசிரியர்கள்இ விடுமுறை குறைவாக பெற்ற ஆசிரியர்கள்இ பாடரீதியாக கூடிய அடைவு மட்டத்தினை பெற்ற ஆசிரியர்கள்இ போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் ஆகியோர் சாதனையாளர்களாக பரிசில்கள்இ சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
சாதனையாளர் பாராட்டு நிகழ்வின் நினைவு மலர் ஒன்றும் இதன்போது வெளியிடப்பட்டது.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்விப் பணிப்பாளர் க.சத்தியநாதன்இ வூட்ஸ் பிராந்திய குழுமத் தலைவர் ம.யோகேஸ்வரன்இ பிரதிக்கல்விப் பணிப்பாளர்களான க.கரிகரராஜ்இ எஸ்.சுரநுதன்இ மண்முனை தென்மேற்கு கோட்டக்கல்விப் பணிப்பாளர் ந.தயாசீலன்இ இலங்கை வங்கி முகாமையாளர்இ கிராம உத்தியோகத்தர்கள்இ கிராம அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
0 Comments:
Post a Comment