26 Nov 2016

சித்த வைத்திய துறையில் பட்டம் முடிந்து வெளியேறியிருக்கின்ற தமிழர்கள் பாதிக்கப்பட்டுளார்கள்

SHARE
மத்திய சுகாதார அமைச்சினால் கிழக்கு மாகாணத்தில் உள்ள சித்த வைத்திய வெற்றிடங்களுக்கு யுனனி வைத்திய துறையில் பட்டத்தினை முடித்துள்ள கிழக்கு மாகாணத்தினைசாரதாவர்களுக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளதாகவும் இதனால்
கிழக்கு மாகாணத்தில் சித்த வைத்திய துறையில் பட்டம் முடிந்து வெளியேறியிருக்கின்ற கிழக்கு மாகாணத்தினைச்சேர்ந்த தமிழர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் குறிப்பிட்டார்.

மாகாணசபை உறுப்பினர் இதுபற்றி மேலும்  தெரிவிக்கையில் ….. 

ஆயூள்வேதம் முடிந்த சிங்களவர்கள் ஆயூள்வேதம் துறைக்கும், சித்தவைத்தியம் நிறைவுசெய்த தமிழர்கள் சித்தவைத்திய துறைக்கும், யுனானி வைத்தியம் நிறைவு செய்த முஸ்லிங்கள் யுனானி வைத்தியதுறைக்கே நியமிப்பது வழக்கமாகும். ஆனாலும் சித்த வைத்திய துறையிலே பட்டம் படித்து மத்திய அரசிலே தம்மை பதிவு செய்வதற்காக விண்ணப்பத்தினை அனுப்பி அதன்மூலம் 09 பேர் அதற்கான இலக்கத்தினை பெற்றுள்ளதுடன் 20 பேர் அளவில் விண்ணப்பத்தினை மத்திய அரசுக்கு அனுப்பி அதற்கான இலக்கத்தினை பெறுவதற்கு எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்ற நிலையில் மத்திய அரசின் சித்த வைத்திய துறை பணிப்பாளரனால் வழங்கப்பட்டுள்ள நியமனத்தினால் சித்தவைத்திய துறையிலே பட்டத்தினை பெற்ற தமிழர்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.  

ஆனால் மத்திய அரசு இவ்வாறான விடயங்களில் தவறினை இழைத்திருக்கின்றது. அதுபோல கிழக்கு மாகாணத்தில் மத்திய அரசினால் விசேட செயற்றிட்டத்தின் கீழ் அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களுக்கு பாரிய நிதியொதுக்கப்பட்டுள்ளதுடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர் வைத்தியசாலைக்கும், மட்டக்களப்பு மாவட்ட சுகாதாரசேவைகள் திணைக்களத்திற்குமே நிதியொதுக்கப்பட்டுள்ளமை மத்திய அரசு பக்கச்சார்பாக நடந்துகொள்வதாக தெரிகின்றது. இப்படிப்பட்ட போக்கினை தொடர்ச்சியாக மத்தியஅரசு கடைப்பிடித்துவருவதானது ஆரோக்கியமான விடயமல்ல. 

இவ்வாறான செயற்பாடுகளை மத்திய அரசு செய்வதற்கு கிழக்கு மாகாண அமைச்சு அனுசரணையாக இருக்கின்றாதா? அல்லது அதனை தடுப்பதற்கு இயலாமல் இருக்கின்றதா? மத்திய சுகாதார அமைச்சும் ஒருபக்க சார்பாக நடக்கின்றதா? எனும் கேள்வி எழுகின்றது. மத்திய அரசின் இவ்வாறான செயற்பாடுகளை தடுத்து நிறுத்த வேண்டும். ஆளுனர் அவர்கள் இந்த சித்த வைத்தியத்திற்குரிய ஆளணியில் ஏனைய துறை சார்ந்தவர்களை நியமிப்பதற்கு அனுமதிக்ககூடாது நான் முஸ்லிம் சமூகத்திற்கு எதிரானவன் அல்ல.

ஒரு சமூகம் சார்ந்த சித்த வைத்தியதுறைக்கு பதவிக்கு அந்ததுறையை சேந்தவர்களை நியமிப்பது நியாயமானதாகும். மத்திய அமைச்சில் உள்ளவர்கள் தொடர்ச்சியாக கிழக்கு மாகாணத்தில் உள்ள குறிப்பாக தமிழர்களை ஓரங்கட்டுவது ஏற்புடையதல்ல இதை தடுத்து நிறுத்துமாறு விரிவான கடிதத்தை கிழக்கு மாகாண அமைச்சர்களுக்கும், ஆளுனருக்கும், மத்திய சுகாதார அமைச்சர், பிரதமர், ஜனாதிபதி ஆகியோருக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

SHARE

Author: verified_user

0 Comments: