29 Nov 2016

கிழக்கு மாகாணசபையின் முதலமைச்சரின் ஊடகச் செயலாளர் யார?

SHARE


கிழக்கு மாகாணசபையின் முதலமைச்சரின் ஊடகச் செயலாளர்  யார? தொடர்பாக எதிர்கட்சித் தலைவர் எஸ்.உதுமான் லெப்பை கேள்வி எழுப்பிய போது கிழக்கு மாகாணசபையில் இன்று சூடான விவாதமும் சலகலப்பும் ஏற்பட்டது.

கிழக்கு மாகாணசபையின் 66 வது அமர்வு திருகோணமலை உட்துறைமுகவீதியில் உள்ள கட்டித்தொகுதியில் தவிசாளர் சந்திரதாச கலபதி தலைமையில்   இன்று (29)காலை 9.45 மணியளவில் கூடியது.


இதன் போது எதிர்கட்சித் தலைவர் எஸ்.உதுமான் லெப்பையால் கேட்கப்பட்ட இரண்டாவது கேள்வியின் போது இந்த ஊடகச் செயலாளர் தொடர்பாக கேள்வி எழுப்பினர்யை எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த முதலமைச்சர் நசீர் அகமட் தமது பிரத்தியேக செயலாளர் மற்றும் ஊடகச்செயலாளர் உத்தியோகத்தர்களின் பெயர்களை வெளிட்டார்.

இதற்கு பதிலளித்த எதிர்கட்சித் தலைர் பத்திரிகைகளில் வெளியாகும் பெயர்களுக்கும் தற்போது தாங்கள் கூறும் பெயர்களக்கும் வித்தியாசம் இருப்பதாக கூறிய போது இந்த சலசலப்பு எற்பட்டது.


SHARE

Author: verified_user

0 Comments: