இன்றைய காலத்தில் ஏழை வறுமையினைக் காரணம் காட்டி மதமாற்றங்கள் நடைபெற்று வரகின்றதனை நாம் அறிவோம் எமது கலாசாரத்தினை நாம் பேணிப் பாதுகாக்க வேண்டும் பாடசாலைகள் மூலமாக இளம் சமூதாயத்தினருக்கு இதனை ஏற்படுத்த வேண்டும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கோ.கருணாகரம் குறிப்பிட்டார்.
தேற்றாத்தீவு கொம்புச் சந்திப் பிள்ளையார் ஆலயத்தில் சனிக்கிழமைகிழமை இரவு (29) நடைபெற்ற தித்திக்கும் தீபாவளி நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு அவர் இவ்வாறு தெரிவித்தார் இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்…
பாடசாலைகள் மூலமாக எமது கலாசாரத்தினை பேணிப் பாதுகாக்கும் நோக்கோடு இரு பாடசாலைகளுக்கு அவர்களுடைய கோரிக்கைக்கு அமைய இனியம் வாத்திய இசைக்கருவிகளை வழங்குவதற்கு நிதி ஒதுக்கியிருந்த வேளையில்; மீண்டும் என்னிடம் கூறினார்கள் இனியம் வாத்திய இசைக்கருவிகள் வேண்டாம் போட்டோ கொப்பி இயந்திரம் பாண்டு வாத்திய கருவிகளை வழங்குமாறு கூறினார்கள் மிகவும் கவலையான விடயம் ஆனால் அந்த கவலைக்கு ஒரு ஈடாக சந்தோசப்பட வேண்டிய விடையம் இந்த நிகழ்விலே தேற்றாத்தீவு சிவகலை வித்தியாலய அதிபர் என்னிடம் இனிய வாத்திய கருவிகளை வாங்கித் தருமாறு கடிதம் மூலம் கோரிக்கையினை விட்டிருந்தார் உண்மையிலே இரண்டு வாரங்களாக நான் கவலையடைந்த விடையம் இன்றைய நாளிலே என்னை சந்தோசப்பட வைத்ததாக அமைந்தது எனக் குறிப்பிட்ட அவர் 2017 அண்டு நிச்சயமாக இப் பாடசாலைக்கு இனியம் வாத்திய இசைக்கருவிகள் கிடைக்கும் என்றும் உறிதியளித்தார்.
அசுரனை அளித்த இந்த நாளிலே விளக்கேற்றி கொண்டாடுகின்ற வேளையில் கடந்த காலங்களில் எமது பிரதேசங்களில் நடந்த அசுரத்தனமான ஆட்சி மாறி இன்று ஒரு புதிய நல்லாட்சி என்று கூறக் கூடிய ஒரு நல்லாட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த ஆட்சியிலே எமது புரையோப் போயியுள்ள இனப் பிரச்சனைக்கு ஒரு சுமூகமான தீர்வு கிடைத்து நாங்கள் தற்போது ஓரு பயமில்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கை ஒரு நிரந்தரமானதாக சந்தோசமானதாக அமைய இறைவனைப் பிராத்தாத்திப்பதாக குறிப்பிட்டார்.
இந் நிகழ்வில் தேற்றாத்தீவு தேனுகா கலைக் கழக மாணவர்களினுடைய பண்ணிசை மற்றும் பாரம்பரிய கலை கலாசாரங்களைப் பிரதிபலிக்கும் நடன நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களும் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன. இந் நிகழ்வில் மண்முனை தென் எருவில் பற்று களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் கலாநிதி.மூ.கோபாலரெட்ணம் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் வைத்தியட்சகர் டாக்டர்.கு.சுகுணன் மாவட்ட மற்றும் பிரதேச கலாசார உத்தியோகஸ்தர்கள் மற்றும் கிராம பிரமுகர்கள் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment