3 Nov 2016

கலாநிதி ஆரியரத்னாவின் 85வது பிறந்த தினத்தையொட்டி இரத்ததானம், மரநடுகை, சிரமதானம், சமய நிகழ்வுகள்.

SHARE
சர்வோத நிறுவனத்தின் ஸ்தாபகர் கலாநிதி ஏ.ரி. ஆரியரத்னாவின் 85வது பிறந்த தினத்தையொட்டி எதிர்வரும் 05 ஆம் திகதி (நொவெம்பெர் 05, 2016) நாட்டின் பல்வேறு பாகங்களிலும்
பல நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக சர்வோதய நிறுவனத்தின் மாகாண இணைப்பாளர் ஈ.எல். அப்துல் கரீம் தெரிவித்தார்.

மட்டக்களப்பு சர்வோதய மாவட்டப் பயிற்சிப் பாடசாலை சத்துருக்கொண்டானில் இடம்பெறும் நிகழ்வுகளில் கலாநிதி ஆரியரத்னாவின் 85வது பிறந்த தினத்திற்காக 85 பேர் இரத்த தானம் செய்யவுள்ளதுடன், 85 செவ்விளநீர் தென்னங்கன்றுகள் நடுகையும், சிரமதானம் மற்றும் பல் சமய நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கரீம் மேலும் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டம் இங்கினியாகல பொல்வத்தையிலிருந்து செவ்விளநீர் தென்னங் கன்றுகள் எடுத்துவரப்பட்டு மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் சர்வோதய நிலையத்தில் சமயப் பிரார்த்தனைகளுடன் நாட்டப்படவுள்ளன.
இந்நிகழ்வுகளில் தமிழ் முஸ்லிம் சிங்கள சமூகங்களைச் சேர்ந்த பல் சமய மக்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

கலாநிதி ஆரியரத்தன 1958 ஆம் ஆண்டு சர்வோதய இயக்கத்தை நிறுவி சுமார் 60 வருடங்கள் அந்த இயக்கத்திற்காக தன்னை அர்ப்பணித்துள்ளதோடு இலங்கை அரசியல் சாசன உறுப்பினர்களில் ஒருவராகவுமுள்ளார்.
தேசோதய, சாந்தி சேனா இளைஞர் அமைப்பு, சர்வோதய சிறுவர் அமைப்பு, சர்வோதய மகளிர் அமைப்பு, சர்வோதய பொருளாதார அபிவிருத்தி அமைப்பு, சர்வோதய அபிவிருத்தி நிதிக் கம்பனி போன்றவை சர்வோதய நிறுவனத்தின் ஏனைய கிளை அமைப்புக்களாகும்.

நாட்டின் அனைத்து 25 மாவட்டங்களிலும் சர்வோதய நிறுவனத்தின் மாவட்டப் பயிற்சி நிலையங்கள் உள்ளன.

சர்வோதய நிறுவனம் அதன் ஆரம்ப காலம் தொட்டு கல்வி, சுகாதார, சமூக, பொருளாதார, அரசியல் விழிப்புணர்வுகளிலும்  வீடமைப்பு, வாழ்வாதாரம், தொழிற்பயிற்சி, சகவாழ்வு, சூழல் சுற்றாடல் இயற்கை வளப் பாதுகாப்பு, நிவாரணம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அமுல்படுத்தி வந்திருக்கின்றது.

SHARE

Author: verified_user

0 Comments: