மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட முனைக்காடு விவேகானந்த வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவர்களில் தெரிவு செய்யப்பட்ட 60மாணவர்களுக்கான இலவச அப்பியாசக் கொப்பிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு திங்கட்கிழமை (28) விவேகானந்த வித்தியாலய மண்டபத்தில் இடம்பெற்றது.
முனைக்காடு கிராமத்தில் பிறந்து வெளிநாடுகளில் தொழில்புரியும் ஐந்து இளைஞர்களின் நிதியுதவியில் பாடசாலையில் வறுமைக்கோட்டின் கீழ் கல்விபயிலும் மாணவர்களுக்கு அவர்களது 2017 ஆம் ஆண்டு கல்விச்செயற்பாட்டிற்குரிய அனைத்து அப்பியாசக்கொப்பிகள் மற்றும் ஏனைய கற்றல் உபகரணங்கள் அனைத்தைம் வழங்கி வைக்கப்பட்டது.
கிராமத்தினைச் சேர்ந்த சி.தயர்சன், ச.சிவகுமார், ப.லேகேஸ்வரன், க.விதுசனன், ஜெ.சத்தியானந்தம் ஆகிய இளைஞர்களின் நிதியுதவியில் குறித்த கற்றல் உபகரணங்கள் அன்பளிப்பு செய்யப்பட்டது.
இந்நிகழ்வில் வித்தியாலய அதிபர் மூ.சிவகுமாரன், விடுதிக்கல் பாடசாலை அதிபர் மா.சத்தியநாயகம், பாடசாலை ஆசிரியர்களான செ.மேகநாதன், தங்கத்துரை யோதீஸ்வரி, கிராம சேவை உத்தியோகத்தர் சி.ஜீவிதன், உக்டா நிறுவன தலைவர் இ.குகநாதன், கிராம அபிவிருத்தி சங்க பொருளாளர் ம.கேதீஸ்வரன் மற்றும் உதவி வழங்கிய இளைஞர்களின் பெற்றோர்கள் ஆகியோர் கலந்து கொண்டு குறித்த அன்பளிப்பு பொருட்களை வழங்கி வைத்தனர். மேலும் இன்னும் இதுபோன்று பல மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment