16 Oct 2016

கிழக்கு மாகாணத்தில் உண்மை, நீதி, மற்றும் நல்லிணக்கத்திற்கான அரங்கம் தெரிவு

SHARE

கிழக்கு மாகாணத்தில் உண்மை, நீதி, மற்றும் நல்லிணக்கத்திற்கான அரங்கம் (Eastern Truth & Reconciliation Forum) தெரிவு செய்யப்பட்டுள்ளதாக சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் பணிப்பாளர் பெரியசாமி முத்துலிங்கம் தெரிவித்தார். 

நிலைமாறுகால நீதிக்கான செயற்பாடுகள் தொடர்பான காத்திரமான கண்காணிப்பு மற்றும் இடையீட்டு பொறிமுறையை உருவாக்கும் நோக்குடன் இந்த அரங்கத்திற்கான உறுப்பினர்கள் மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களிலிருந்து சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

தெரிவு செய்யப்பட்டுள்ள இந்த உறுப்பினர்களுக்கு இலங்கையில் உண்மை, நீதி, மற்றும் நல்லிணக்கம் தொடர்பாகவும் கற்றுக்கொண்ட பாடங்கள் சம்பந்தமாகவும்தொ(Truth, Justice and Reconciliation in Sri Lanka – Lessons Learnt Workshopsடர்ச்சியான செயலமர்வுகள் நடத்தப்பட்டு அவர்கள் தயார்படுத்தப்பட்டுள்ளதாகவும் சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் (Institute of Social Development)பணிப்பாளரும், ஆய்வாளரும், எழுத்தாளருமான பெரியசாமி முத்துலிங்கம் மேலும் தெரிவித்தார்.

எதிர்வரும் காலங்களில் இந்த வலையமைப்பு உறுப்பினர்கள் அவ்வப்போது மாகாண மட்ட சந்திப்புக்களை நடத்தி நிலைமாறுகால நீதிப் பொறிமுறைக்கான வேலைத் திட்டங்களை முன்னெடுத்துச் செல்வார்கள் என்றும் அவர் கூறினார்.
கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த சுமார் 30 சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் மத்தியில் இருந்து மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த ஆண் பெண் அங்கத்தவர்கள் இருவர், திருகோணமலை மாவட்டத்திலிருந்து இருவர் மற்றும் அம்பாறை மாவட்டத்திலிருந்து ஒருவர் என்ற அடிப்படையில் இந்த அரங்க அங்கத்தவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

கிழக்கு மாகாண அரங்கத்தின் தலைவராக மட்டக்களப்பு மாவட்ட சிவில் பிரஜைகள் சபையின் தலைவர் வர்ணகுலசிங்கம் கமலதாஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார். 

SHARE

Author: verified_user

0 Comments: