20 Oct 2016

மட்டக்களப்பில் தகவல் அறியும் சட்டமூலம் தொடர்பில் அறிவூட்டல்

SHARE
தகவல் அறியும் சட்டம் மூலம் தொடர்பில் சிவில் அமைப்புகள், ஊடகவியலாளர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கு அறிவூட்டும் செயலமர்வு இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது
மட்டக்களப்பு ஈஸ்ட் லகூன் ஹோட்டலில் யுத்தம் மற்றும் சமாதானம் தொடர்பில் அறிகையிடும் அமைப்பின் நிதி பங்களிப்பில் நலிவுற்ற சமூக அபிவிருத்திக்கான தன்னார்வ அமைப்பு, ஓகான் நிறுவனம், ஊடக தொழிற்சங்க சம்மேளனம் என்பன இணைந்து இந்த நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தது.
இதன் ஆரம்ப நிகழ்வில் மட்டக்களப்ப மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.
இதன்போது தகவல் பெறும் உரிமை சட்டம் தொடர்பாக சட்டத்தரணி ஜெகத் லியனாராச்சி கலந்து கொண்டு கருத்துரைகளை வழங்கினார்.
அத்துடன் தகவல் அறியும் சட்டத்தினால் ஏற்படும் நன்மைகள், அது தொடர்பில் பொதுமக்கள் அறிந்துகொள்ளவேண்டிய விடயங்கள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டது.
இதன்போது தகவல் அறியும் சட்டம் தொடர்பில் கேட்க்கப்பட்ட கேள்விகளுக்கு சட்டத்தரணியினால் விளக்கமளிக்கப்பட்டதுடன் தெளிவூட்டல்களும் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் கிழக்கு மாகாணத்தில் உள்ள மூன்று மாவட்டங்களிலும் இருந்து ஊடகவியலாளர்கள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.














SHARE

Author: verified_user

0 Comments: