கண்டி போகம்பர விளையாட்டு மைதானத்தில் கடந்த வாரம் நடைபெற்ற 32ஆவது பாடசாலை தேசிய மெய்வல்லுனர் விளையாட்டு விழாவில் தங்கப்பதக்கம் வென்ற மற்றும் வர்ண சாதனை விருது பெற்ற மட்டக்களப்பு களுதாவளை மாணவர்களை மாவட்ட அரசாங்க அதிபர் புதன் கிழமை (19) கௌரவித்தார்.
மட்டக்களப்பு பட்டிருப்பு வலயத்துக்குட்பட்ட களுதாவைள மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த ஜெயரெட்ணம் ரிசானன் 15 வயதுக்குக் கீழ ஆண்களுக்கான குண்டு போடுதல் மற்றும் பரிதி வட்டம் வீசுதல் ஆகிய போட்டிகளில் முதலாம் இடம் பெற்றுள்ளார். அத்துடன், 17 வயதுக்குக் கீழ் ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் வர்ண சாதனை விருதினை கணேசகுமார் சந்திரகுமார் பெற்றுள்ளார்.
இவ் 32ஆவது பாடசாலை தேசிய மெய்வல்லுனர் விளையாட்டு விழாவில் கிழக்கு மாகாணத்திற்குக் கிடைத்த 40 புள்ளிகளில் 20 புள்ளிகளை களுதாவளை மகாவித்தியாலய மாணவன் ஜெயரெட்ணம் ரிசானன் பெற்றுக் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்கள் இருவரையும் கௌரவிக்கும் நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போது பாடசாலை அதிபர் பே.காப்தீபன் மற்றும் உடல் கல்வி ஆசிரியர் கோ.ஜெயரெட்ணம் ஆகியோரும் இணைந்திருந்தனர்.
இந்த நிழ்கவில், மாவட்ட மேலதிக அரசாஙக அதிபர் எஸ்.கிரிதரன், பிரதம கணக்காளர் எஸ்.நேசராஜா, உதவித்திட்டமிடர் பணிப்பாளர்களான திருமதி ஜெ.கணேசமூர்த்தி, ஏ.சுதாகரன், ஏ.சுதர்சன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment