2 Oct 2016

கல்விக் கல்லூரி ஆசியரியர்களை உடன் பதிவு செய்யுமாறு கிழக்கு முதலமைச்சர் வேண்டுகோள்.

SHARE
கல்விக் கல்லூரிகளில் கல்வி கற்று ஆசிரியர்களாக 2016 ஆம் ஆண்டு வெளியாகியுள்ள அனைவரும் இன்று ஞாயிற்றுக் கிழமை (02) இரவு 10
மணிக்குள் தங்களது பெயர் விபரங்களை கிழக்கு மாகாண முதலமைச்சரின் காரியாலயத்தில் பதிவு செய்து கொள்ளுமாகு கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட் இன்று ஞாயிற்றுக் கிழமை காலை தெரிவித்துள்ளார்.

கவிக் கல்லூரிகளில் கற்று 2016 ஆம் ஆண்டு வெளியாகியுள்ளவர்களை கிழக்கு மாகாணத்திலேயே  நியமனம் பெற்றுக் கொடுப்பதற்காக தாம் முயற்சித்து வருகின்றதாகவும்  இவர்களுக்கு மிகவிரைவில் நியமனம் வழங்க ஏற்பாடுகள் நடை பெற்றுக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ள அவர் இதற்காக வேண்டி குறித்த நபர்கள் அவர்களது, பெயர், விலாசம், தேசிய அடையாள அட்டை இலக்கம், கல்வி கற்ற கல்விக் கல்லூரியின் பெயர், பாடம்,  போன்ற விபரங்களை உள்ளடக்கியதாக இன்று இரவு 10 முன்பதாக, 0771505747 மற்றும், 0262226071 ஆகிய தொலைபேசி இலக்கங்கங்களுடன் நேரடியாக தொடர்பு கொண்டும், 0771276680 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு குறுந்தகவல் மூலமும் பதிவு செய்து கொள்ளலாம். 

இந்நிலையில் கிழக்கு மகாணத்திலுள்ள வேலையற்ற பட்டதாரிகள் எதிர்கொண்டுள்ள வேலைவாய்ப்புப் பிரச்சனை தொடர்பில் நாளை திங்கட் கிழமை (03)  பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் அறிக்கை ஒன்றைச் சமர்ப்பிக்கவுள்ளதாகவும், ஜனாதிபதி நாட்டுக்கு வந்ததும் அவரிடமும் இவ்விடையம் தொடர்பில் அறிக்கை ஒன்றைச் சமர்ப்பிக்கவுள்ளதாகவும்,  கிழக்கிலுள்ள அனைத்து வேலையற்ற பட்டதாரிகளுக்கும் நியமனம் வழங்குவது தொடர்பான வேலைகள் முன்னெடுக்கப் பட்டுள்ளதாகவும், முதலமை;சசர்; மேலும் தெரிவித்துள்ளார்.

SHARE

Author: verified_user

0 Comments: