தற்போதைய கணக்கெடுப்புக்களின் மூலமாக தலைசீமியா, புற்றுநோய் போன்றன அதிகரித்து வருகின்ற நிலையில் எதிர்காலத்தில் இருபது
பேரில் பத்துபேருக்கு தலைசீமியா, புற்றுநோய் போன்றன ஏற்படுவதற்கு வாய்ப்புக்கள் உள்ளது என மட்டக்களப்பு மாவட்ட இரத்த வங்கி பொறுப்பு தாதி உத்தியோகத்தர் ரி.ஜெயராஜா குறிப்பிட்டார்.
முதலைக்குடா மகா வித்தியாலயத்தில் இன்று(18) செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற இரத்ததான நிகழ்வில் கலந்து கொண்டு கூறுகையிலேயே இதனை தெரிவித்தார்.
தொடர்ந்தும் அவர், குறிப்பிடுகையில் மற்றவர்கள் வாழவேண்டும் என்பதற்காக குருதியை கொடையாக வழங்குகின்ற அனைவரும் நோயின்றி வாழுகின்றமையை அவதானிக்க முடிகின்றது. இது இறைவன் அவர்களுக்கு கொடுத்த கொடையாகும். குருதி உயிருக்கு சமம் எனசொல்லப்படுகின்றது.
ஆகவே குருதி வழங்குகின்றவர்கள் உயிரை கொடுக்குகின்றவர்கள். இவர்களிடையே மனிதாபிமான பண்பு மேலோங்கி இருக்கும் எனவும் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment