21 Oct 2016

விஞ்ஞான தொழிநுட்பக்கண்காட்சி

SHARE
(க.விஜி)
மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியில் விஞ்ஞானப்பாட ஆசிரியர்களின் ஒருங்கிணைந்த கூட்டுப்பொறுப்புடனும்,மெதடிஸ்த மத்தியகல்லூரியின் அதிபர் ஜே.ஆர்.பீ.விமல்ராஜ் அவர்களின்
நேரடியான வழிகாட்டல்கள்,ஆலோசனைகளின் பங்களிப்புடன் வியாழக்கிழமை (20.10.2016) காலை 9.00 மணிமுதல் பிற்பகல் 2.00 மணி வரையுள்ள காலப்பகுதியில் மாபெரும்  "விஞ்ஞான தொழிநுட்பக்கண்காட்சி" பாடசாலையில் உள்ள காட்மண்ட் மண்டபத்தில் அதிபர் விமல்ராஜ் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச்சபையின் மாவட்ட முகாமையாளர் டீ..பிரகாஸ்,பிரதி அதிபர் இராஜதுரை பாஸ்கர்,ஓய்வுநிலை ஆங்கில ஆசிரியை திருமதி வை.சூசைதாசன்,விஞ்ஞான ஆய்வுகூட உதவியாளர் திருமதி இந்துமதி வீரேந்திரன்,மற்றும் பகுதித்தலைவர் விஜயலெட்சுமி அசோக்சூரியவன்சி,உட்பட ஆசிரியர்கள், மாணவர்கள், கலந்துகொண்டார்கள்.


இதன்போது சுமார் நூற்றுக்கு மேற்பட்ட திறமையான விஞ்ஞான தொழிநுட்ப விடயங்கள் மாணவர்களினால் காட்சிப்படுத்தப்பட்டது.இக்கண்காட்சியினை புனிதமிக்கல்லூரி,சிசிலியா பெண்கள் பாடசாலை,வின்சன்ட் உயர்தர பாடசாலை போன்ற பாடசாலையைச் சேர்ந்த  மாணவர்கள் வருகைதந்து இக்கண்காட்சியினை பார்வையிட்டார்கள்



SHARE

Author: verified_user

0 Comments: