9 Oct 2016

நாட்டின் பொருளாதரத்தை வலுப்படுத்தி தலை நிமிர்ந்து வாழவேண்டியவர்கள் வீதிகளில் இறங்கி போராடும் நிலைமை

SHARE
நாட்டின் பொருளாதரத்தை வலுப்படுத்தி  தலை நிமிர்ந்து வாழவேண்டியவர்கள் இன்று தமது சம்பள உயர்வுக்காக வீதிகளில் இறங்கி போராடும் நிலைமை ஏற்பட்டுள்ளமை  வேதனையளிக்கின்றதுபெருந்தோட்ட தொழிலாளர்களின்  நியாயபூர்வமான கோரிக்கையை கிழக்கு மாகாண மக்களும்  ஏற்றுக்கொள்கின்றார்கள்

பெருந்தோட்ட  தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்கப்பட  வேண்டும் என்பதே அனைவரினதும் கோரிக்கையாகும்


அதிகாரத்திலுள்ளவர்களால் மாகணங்கள் மற்றும் சமூகங்கள் மீது பாரபட்சம் காட்டப்படுவதானாலயே பல பகுதிகளில் மக்கள் தமது உரிமைகளுக்காக வீதிகளில் இறங்கி போராட வேண்டியுள்ளது


இன்று கிழக்கு மாகாணத்திற்கான ஆசிரியர் நியமனங்ளை வழங்குவது தொடர்பில் கல்விமைச்சின் செயலாளரால் காட்டப்படும் பாரபட்சத்தினால் எமது மக்களும் இன்று தமது  உரிமைகளுக்காக குரல்  எழுப்பி வருகின்றனர்


எனவே  தற்போது  கல்வியியற் கல்லூரிகளில் தமது கற்கைளை நிறைவுசெய்து வெளி மாகாணங்களில் நியமனம் பெற்றுள்ள  மாணவர்கள் தேசிய கல்வியமைச்சின் அதிகாரிகளால்   கையறு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்

மலையகபெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நியாயம் நிலை நாட்டப்படுவது போல் வெளி மாவட்டங்களுக்கு நியமனம்பெற்றுள்ள ஆசிரியர்களுக்கும் நியாயம் நிலைநாட்டப்பட  வேண்டும்

 கல்வியியல் கற்கையை பூர்த்தி செய்த   கிழக்கு மாகாண ஆசிரியர்களுக்கு கிழக்கு   மாகாணத்திலேயே நியமனம் வழங்கப்படும் வரை அதற்காக குரல் கொடுப்பதிலிருந்து ஓயப் போவதில்லை என்பதை உறுதியுடன் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன் .


நன்றி
கிழக்கு மாகாண முதலமைச்சர்
ஹாபிஸ் நஸீர் அஹ்மட்



SHARE

Author: verified_user

0 Comments: