(ஏ.எல்.எம்.ஷினாஸ் )
மருதமுனை யுனிவர்ஸ் கழகத்தின் ஐம்பதாவது உதைபந்தாட்ட போட்டியில் ஈஸ்டன் யூத் கழகம் சம்பியன் கிண்ணத்தை வென்றது.
அம்பாறை மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளனத்தின் அங்கத்துவ கழகங்களில் ஒன்றான மருதமுனை யுனிவர்ஸ் விளையாட்டுக் கழகத்தினர், தங்கள் கழகம் பங்குபற்றும் ஐம்பதாவது உதைபந்தாட்ட போட்டி வெகு விமர்சையாக கடந்த வெள்ளிக்கிழமை (21) மருதமுனை மசூர் மெளலானா விளையாட்டுத் தொகுதி மைதானத்தில் கழகத்தின் தலைவர் கணக்காளர் றிஸ்வி யஹ்சர் தலைமையில் நடைபெற்றது.
உதைபந்தாட்ட போட்டியில் கலந்து கொண்ட ஈஸ்டன் யூத் விளையாட்டுக் கழகம் (03:O1) என்ற கோள் வித்தியாசத்தில் யுனிவர்ஸ் விளையாட்டுக் கழகத்தினை வெற்றி கொண்டு சம்பியன் கிண்ணத்தை தனதாக்கிக் கொண்டன.
விழாவிற்கு பிரதம அதிதியாக கலந்து கொண்ட மருதமுனையை சேர்ந்த அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் ஏ.எம்.அப்துல் லத்தீப் சம்பியன் அணிக்கு வெற்றிக் கிண்ணத்தையும், பத்தாயிரம் ரூபா பணப்பரிசினையும் வழங்கி கெளரவித்தார்.
கௌரவ அதிதியாக கலந்து கொண்ட முன்னாள் மாநகர சபை உறுப்பினர் ஏ.ஆர்.அமீர் யுனிவர்ஸ் அணிக்குரிய கிண்ணத்தை வழங்கி வைத்தார். நிகழ்வில் அம்பாறை மாவட்ட உதைந்தாட்ட சம்மேளனத்தின் செயலாளர் ஏ.எம்.இப்றகீம், பொருளாளர் எம்.ஐ.எம்.அப்துல் மனாப் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
போட்டிக்கு பிரதான மத்தியஸ்தராக உடற்கல்வி ஆசிரியர் எம்.பி.எம்.றசீத் கடமையாற்றினார்.
0 Comments:
Post a Comment