கிராமங்களில் இருந்து தங்களது சுய தொழில்களை மேற்கொள்ளும் பெண்களதும் உற்பத்திப் பொருட்களுக்கான சந்தை வாய்ப்புக்களை உருவாக்கிக் கொடுக்கும் நோக்கில் வவுணதீவில் உள்ளுர் உற்பத்திப் பொருள் கண்காட்சியும் விற்பனையும் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளதாக வவுணதீவு துர்க்கா மகளிர் சங்க செயற்பாட்டாளர் ரீ. தயாழினி தெரிவித்தார்.
வவுணதீவு பரமேஸ்வரா வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் புதன்கிழமை (ஒக்ரோபெர் 26, 2016) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
வவுணதீவு துர்க்கா மகளிர் சிக்கன கடனுதவு கூட்டுறவு சங்கம் றுந நககநஉவ நிறுவனத்தின் நிதி அனுசரணையுடன் இக்கண்காட்சி மற்றும் விற்பனை நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது.
இக்கண்காட்சியில் வவுணதீவு துர்க்கா மகளிர் சங்கத்தில் அங்கத்தவர்களாக உள்ள பெண்களதும் மண்முனை மேற்கு பகுதியில் உள்ள கிராமங்களில் இருந்து தங்களது சுய தொழில்களை மேற்கொள்ளும் பெண்களதும் உற்பத்திப் பொருட்கள் கண்காட்சிக்கும் விற்பனைக்கும் வைக்கப்பட்டிருந்தன.
இக்கண்காட்சியைத் திறந்து வைத்து உரையாற்றிய “வீ எபெக்ற் -றுந நுககநஉவ” நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் சுபாஷி திஸாநாயக்க@
இங்கு கண்காட்சிக்கும் விற்பனைக்கும் வைக்கப்படும் உற்பத்திப் பொருட்கள் அனைத்தும் முற்று முழுதாக தங்களது கிராமங்களில் கிடைக்கும் உள்ளுர் வளங்களைக் கொண்டு கிராம மக்களது சுய முயற்சிற்கு ஏற்ப உற்பத்தி செய்யப்பட்ட கலப்படமில்லாத பொருட்களாகும் என்பதை அறிந்து மகிழ்ச்சியடைகிறேன்.
கிராமங்களில் சுய தொழில்களை மேற்கொண்டு உற்பத்திகளைச் செய்யும் பெண்களை மேலும் சுய தொழில்வாய்ப்புக்களில் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டே எமது நிறுவனம் சுனாமிக்குப் பின்னரான காலப் பகுதியிலிருந்து இப்பகுதி மக்களுக்கு உதவி வந்திருக்கின்றது.
இந்த வருடம் டிசெம்பெர் மாதத்துடன் எமது நிதி ரீதியான உதவிகள் முடிவுக்கு வருகின்ற போதும் கொள்ளளவை வலுப்படுத்துவதற்கான ஆதரவுத் திட்டங்கள் இருந்து கொண்டிருக்கும்.
எமது நிறுவனத்தினால் ஆதரவளிக்கப்பட்ட இந்த துர்க்கா மகளிர் சங்கம் பிற நிதி நிறுவனங்களின் உதவில் தங்கியிருக்காமல் தனித்து நின்று இயங்குவதற்கான சகல தகைமைகளையும் பெற்றுள்ளது என்பதை இன்றைய உற்பத்திப் பொருள் கண்காட்சியும் விற்பனையும் உறுதிப்படுத்துகின்றது.
எனினும், இந்தப் பிரதேசத்தின் நீண்ட கால நிலைத்து நிற்கக் கூடிய அபிவிருத்தியைக் கருத்திற் கொண்டு அரச நிருவாகத்தின் ஆதரவு இந்த மகளிர் சங்கத்திற்கு எப்பொழுதும் இருக்க வேண்டும் என்பதை நாங்கள் உணர்ந்துள்ளதோடு அப்படிப்படிப்பட்ட ஆதரவை வழங்குமாறு நான் பிரதேச அரசாங்க அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன் என்றார்.
தங்களது அனைத்து விதமான உற்பத்திகளையும் சந்தைப்படுத்துவதற்கு இந்தக் கண்காட்சி விற்பனை நிகழ்வு ஒரு தளமாக அமைவதுடன் கிராமப் பெண்களது உள்ளுர் உற்பத்திகளை இனி வருகின்ற காலங்களில் உள்ளுரிலேயே சந்தைப்படுத்துவதற்கும் எதிர்வருகின்ற காலங்களில் ஒரு மாற்றத்தை கொண்டுவருகின்ற ஒரு கன்னி முயற்சியாகவே இதனை கருதுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஆகவே, கிராமங்களிலுள்ள சுயதொழில் முயற்சியாளர்கள் கிராமங்களில் தங்களது உற்பத்திகளை சந்தைப்படுத்துவதற்கும் பெண் சுய தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிப்பதற்கும் அவர்களுக்கு ஏனைய வலையமைப்புக்களுடனான தொடர்புகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கும் அதிகாரிகள் உதவிகரமாக இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
இந்நிகழ்வில் வீ எபெக்ற் நிறுவனத்தின் இலங்கைக்கான நிகழ்ச்சித் திட்ட ஒருங்கிணைப்பாளர் ரி. மயூரன், வவுணதீவு பிரதேச செயலாளர் எஸ். சுதாகர், கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் கே. கனகசுந்தரம் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment