9 Oct 2016

மட்டு எருவிலில் விபத்து. ஸ்தலத்தில் ஒருவர் பலி. இளைஞன் படுகாயம்.

SHARE
(பழுகாமம் நிருபர்)

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எருவில் இடம்பெற்ற விபத்தில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
இன்று ஞாயிற்றுக்கிழமை (09) காலை இடம்பெற்ற இந்த விபத்தில் கணேசமூர்த்தி (59 வயது)என்பவர்
உயிரிழந்துள்ளதுடன் களுவாஞ்சிகுடியை சேர்ந்த வடிவேல் கிருஸாந்த்(18வயது)என்னும் இளைஞன் படுகாயமடைந்துள்ள நிலையில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எருவில் பழைய பொலிஸ் நிலையம் வீதியில் சென்ற முதியவரின் மீது வேகமாக சென்ற மோட்டார் சைக்கிள் மோதியதன் காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் சடலம் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணையை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.






SHARE

Author: verified_user

0 Comments: