(துறையூர் தாஸன்)
உலக சிறுவர் தினத்தை (ஒக்டோபர் 01) சிறப்பிக்கும் வகையில் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் சிறு பிள்ளைவைத்தியப் பிரிவினால் ஒழுங்குசெய்யப்பட்ட சிறுவர் தின நிகழ்வு சனிக்கிழமை (01) மேற்படி வைத்தியசாலையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
“அன்புடன் பாதுகாத்துக் கொள்ளுங்கள்” எனும் தொனிப்பொருளின் கிழ் நடைபெற்ற இச்சிறுவர் தின நிகழ்வில், மட்டு.அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் விமல் யகோத ஆராச்சி முதன்மை அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றினார்.உலக சிறுவர் தினத்தை (ஒக்டோபர் 01) சிறப்பிக்கும் வகையில் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் சிறு பிள்ளைவைத்தியப் பிரிவினால் ஒழுங்குசெய்யப்பட்ட சிறுவர் தின நிகழ்வு சனிக்கிழமை (01) மேற்படி வைத்தியசாலையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
சிறுவர்களுக்கெதிரான வன்முறைகள் நிமிடத்துநிமிடம் உலகெங்கிலும் இடம்பெற்றுவரும் வேளையில் இலங்கையிலும் பாரியளவாக இடம்பெற்றுக் கொண்டு இருப்பதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. சிறுவர்களுக்கெதிரான அடக்குமுறைகள் மற்றும் பாலியல் துஸ்பிரயோகங்களைத் தடுத்து நிறுத்த வேண்டியது எங்களின் பொறுப்பாக இருப்பதோடு பெற்றோர்களிடமும் தங்கியுள்ளது. என அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட மயக்க மருந்து வைத்தியநிபுணர் சி.தேவகுமார் தனது உரையின்போது குறிப்பிடுகையில்….
சிறார்களின் தனித்துவ இயல்பினையும் சிறார்களை எவ்வாறு எதிர்கால சந்ததியாக வளர்த்தெடுக்கப்பட வேண்டும் என்பதையும் சிறார்களுக்கு எதிரான வன்முறைகள் களையப்படுவதுடன் அவர்களுக்கான வழிகாட்டிகளாக பெற்றோரும் பாடசாலை சமூகமும் செயற்பட வேண்டும் எனவும் கூறினார்.
மல்முனை கார்மேல் பற்றிமா தேசிய கல்லூரியின் பிரதி அதிபர் கருத்து தெரிவிக்கையில்…
சிறார்களுக்கெதிரான வன்முறைகள் நாளுக்குநாள் அதிகரித்து செல்வதுடன் பலசிறார்கள் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டு உயிரைமாய்க்கும் நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர் என்பதை ஊடகங்கள் மூலமாக அறியக் கூடியதாகவுள்ளது. அத்தோடு சிறுவர்களுக்கான முறையான சமூக மற்றும் பாடசாலைச் சூழலை அமைத்துக் கொடுப்பதுடன் அவர்களுடன் அன்பாகவும் நெருக்கமாகவும் இருக்க வேண்டியது ஒவ்வொரு பெற்றோரினதும் பொறுப்பாகும் என குறிப்பிட்டார்.
பாடசாலைச் சிறார்களின் ஆடல், பாடல், கதை, பேச்சு, கவிதை, போன்ற கலை நிகழ்ச்சிகள் இதன்போது ஆற்றுகை செய்யப்பட்டதோடு,
இதன்போது கலந்து கொண்ட மாணவர்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் சிறார்கள், பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள் வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் உள்ளிட்டபலர் இதன் போது கலந்து கொண்டனா
0 Comments:
Post a Comment