2 Oct 2016

மட்.களுதாவளை விபுலானந்தா முன்பள்ளி மாணவர்களின் சிறுவர் சந்தை

SHARE
சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு, மட்.களுதாவளை விபுலானந்தா முன்பள்ளி மாணவர்களின் சிறுவர் சந்தை சனிக்கிழமை (01) மாலை களுதாவளை மூன்றாம் பிரிவில் அமைந்துள்ள விபுலானந்தா முன்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
இதன்போது இம்முன்பள்ளியில் பயிலுகின்ற சிறார்கள் 7 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு பெற்றோர்களின் உதவியுடன் தனித்தனியான சந்தைக் கடைகளில் பெருட்கள் விற்பனை செய்யப்பட்டன.

சிற்றுண்டிகள், விளையாட்டுப் பொருட்கள், மரக்கறிவகைகள், பழ வழககள், போன்றன இதன்போது விற்க்கப்பட்டன.

இப்பாடசாலையின் முன்பள்ளி ஆசிரியர்களான கு.கஸ்தூரி மற்றும், எஸ். சோபிதா ஆகியோரின் முயற்சியினால் பெற்றோர்கள், மற்றும் நலன் விரும்பிகள், பொதுமக்களின் ஒத்துழைப்புடன் சிறுவர் சந்தை வியாபாரம் சிறப்பாக நiடைபெற்றன.

இச்சிறுவர் சந்தை நிகழ்வின் மூலம், சிறுவர்கள், ஏனைய சிறுவர்களுடன் கூடிப்பழகுதல், விட்டுக் கொடுத்தல்,  பெரியோரை மத்தித்தல் , பொருட்களை அடையாம் காணுதல், போன்ற பல விடையங்களைக் கற்றுக் கொள்வதாக இம்முன்பள்ளி ஆசிரியர்கள் தெரிவித்தனர்.





























SHARE

Author: verified_user

0 Comments: