2 Oct 2016

படுவான்கரைப் பிரதேச பாடசாலைகளுக்கு துறைசார் ஆசிரியர்களை நியமிக்குமாறு கோரிக்கை.

SHARE
(சுதா)

மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப் பிரதேச பாடசாலைகளுக்கு கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம் ஆகிய பாடங்களை கற்பிப்பதற்கு துறைசார் ஆசிரியர்களை நியமிக்குமாறு கோரிக்கைமட்டக்களப்பு மாவட்டத்தில் குறிப்பாக படுவான் கரைப் பிரதேச பாடசாலைகளில் கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம், ஆகிய பாட நெறியினை போதிப்பதற்கு துறை சார்ந்த ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதாகவும் இது சம்பந்தமாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சு புதிய ஆசிரியர் நியமனங்களை வழங்குகின்ற போது கஷ்டப் பிரதேச பாடசாலைகளுக்கு கணக்கீட்டின் அடிப்படையில் கூடுதலான ஆசிரியர் ஆளணியினை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கல்வி அமைச்சினால் மட்டக்களப்பு மாவட்ட கல்வி அபிவிருத்தி இணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதி அமைச்சரும் தற்போதைய வர்த்த வணிக துறை அமைச்சின் சிரேஷ்ட ஆலோசகர் சோமசுந்தரம் கணேசமூர்த்தி ஞாயிற்றுக் கிழமை (02) கோரிக்கை விடுத்துள்ளார். 

கஷ்டப் பிரதேச பாடசாலைகளில் கணிதம் விஞ்ஞானம், ஆங்கிலம், போன்ற பாடங்களை துறை சாராத ஆசிரியர்கள் கற்பிப்பதனால்; மாணவர்கள் பொதுப் பரீட்சைகளில் கூடியளவு சித்தியடைய முடியாத நிலை ஏற்படுகிறது. அதிலும் குறிப்பாக ஆங்கிலப் பாடம் பல பாடசாலைகளில் போதிக்கப்படுவதில்லை இது மாணவர்களின் திறமையினை பாதிப்பது மாத்திரமல்லாது சித்தி வீதத்தினை குறைக்கும் செயற்பாடாகும்.

பட்டிருப்பு கல்வி வலயத்தின் போரதீவுப்பற்று பிரதேச பாடசாலைகளில் கணிதம்,  விஞ்ஞானம், ஆங்கிலம், ஆகிய பாடநெறிகளுக்கு துறைசார்ந்த ஆசிரியர்கள் பற்றாக்குறையாகவுள்ளாதாகவும், பல பாடசாலைகளில் விஞ்ஞான ஆய்வு கூட வசதிகள் இல்லை அத்துடன் வரட்சியான காலநிலை காரணமாக சுமார் மூன்று, நான்கு கிலோ மீற்றர் தூரம் சென்று மாணவர்கள் குடி நீரினைப் பெறும் நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்ததுடன்.

இது விடயம் தொடர்பாக மத்திய  கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசமிடம் கலந்துரையாடியிருப்பதாகவும் மிக விரைவில் புதிய கல்வித் திட்டத்தின் அடிப்படையில் ஆசிரியர் நியமனங்கள் வழங்குவதில் மத்திய அரசின் அனுசரணையுடன் மாகாண கல்வி அமைச்சு ஆசிரியர் நியமனங்;களை வழங்கும் போது கஷ்ட பிரதேசப் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையினை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக  இணக்கம் தெரிவித்ததாக மட்டக்களப்பு மாவட்ட கல்வி அபிவிருத்தி இணைப்பாளர் சோ.கணேசமூர்த்தி மேலும் தெரிவித்துள்ளார். 

SHARE

Author: verified_user

0 Comments: