மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வேலையில்லா பட்டதாரிகள் ஒன்றிணைந்து இன்று(12.10.2016) புதன்கிழமை காலை 10.00 மணியளவில் பாரிய கவயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடாத்தினார்கள்.
மட்டக்களப்பு காந்தி பூங்காநிலையத்தில் காலையில் ஒன்று கூடிய பட்டதாரிகள் மாவட்ட செயலகம் வரை சென்று தமது கோரிக்கை அடங்கிய மகஜரை அரச அதிபர் பீ.எஸ்.எம்,சார்ள்ஸிடம் ஒப்படைத்தார்கள்.
பட்டதாரிகள் சுலோக அட்டைகளை தாங்கி நின்று கவனயீர்ப்பு போராட்டத்தை நாடாத்தினார்கள். "மத்தியரசே..!! மாகாண அரசே தொழில் வழங்குங்கள்" ,
"கிழக்கு மாகாணத்தில் சிங்கள மொழிமூலம் அழகியல்பாடத்துக்கான விண்ணப்பம் கோரப்பட்டிருந்தும் தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளது" "தேர்தல் விஞ்ஞாபனத்தில் (10000)பத்தாயிரம் தொழில்வாய்ப்புக்கள் குறிப்பிடப்பட்டும் இதுவரை கொடுக்கப்படவில்லை" ,எனப் சுலோகஅட்டைகளை தாங்கி நின்றார்கள்.
0 Comments:
Post a Comment