2 Oct 2016

துறைநீலாவணையில் நடைபெற்ற சர்வதேச சிறுவர் தின நிகழ்வு

SHARE
(சுதா)

மட்டக்களப்பு துறைநீலாவணை வடக்கு கண்ணகி முன்பள்ளி சிறுவர் பாடசாலை மாணவர்களின் பெற்றோர் ஏற்பாடு செய்த சர்வுதெச சிறுவர் தின நிகழ்வு சனிக்கிழமை (01) துறைநீலாவணைணண சித்தி விநாயகர் வித்தியாலய திருமதி நகுலேஸ்வரி புள்ளநாயகம் கலையரங்கில் நடைபெற்றது.

நிகழ்வில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.மகேந்திரன் மற்றும் கிராம சேவையாளர்களான வை.கனகசபை, தி.கோகுலராஜ் மற்றும் மாதர் அபிவிருத்திச் சங்கப் பிரதிநிதிகள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது மாணவர்களினால் மும்மொழிகளிலும் ஆடல் பாடல் நடனம் நிகழ்த்தப் பட்டதுடன் அதிதிகளினால் மாணவர்களுக்குப் பரிசுப் பொருட்களும் வழங்கி வைக்கப் பட்டமை குறிப்பிடத்தக்கது.



SHARE

Author: verified_user

0 Comments: