இந்த நாட்டிலே சமாதானமும் சகவாழ்வும் நிலைபெற வேண்டும் என்ற நோக்கோடு எமது கட்சித் தலைவரான பிரதம மந்திரி ரணில் விக்கிரம சிங்க உழைத்து வருகின்றார். தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சனைக்ள தீர்க்கப்பட வேண்டும் நீண்ட கால யுத்தத்திற்குப் பின்னர் தமிழ் மக்களுக்கு ஓர் அரசியல் தீர்வு பெறப்பட வேண்டும்.
அவை ஒரு புதிய அரசியல் யாப்பின் மூலம் பெறப்பட வேண்டும் என்பத்தில் ஐக்கிய தேசியக் கட்சி மிகவும் உறுதியாக உள்ளது. என
பட்டிருப்புத் தொகுதியின் ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளர் கணேசமூர்த்தி தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பிலுள்ள சிறுவர் இல்லங்களைப் பார்வையிடுவதற்காக ஞாயிற்றுக் கிழமை (23) மாலை விஜயம் செய்திருந்த சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜரங்க அமைச்சர் திருமதி.விஜயகலா மகேஸ்வரனுடன் கலந்து கொண்டு செட்டிபாளையம் சிவன் கிட்ஸ ஹேமில் நடைபெற்ற நிகழ்வில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்…..
தமிழ் மக்களின் இனப்பிரச்சனைக்கான தீர்வு, யுத்ததினாலே பாதிக்கப்பட்டுப் போயுள்ள எமது மக்களின் துயரங்களைத் துடைத்தல் போன்ற இரண்டு விடையங்களையும் நாம் தற்போது உற்று நோக்க வேண்டியவர்களாகவுள்ளோம். 30 வருடகாலமாக எமது பிரதேசங்கள் எந்த வித அபிவிருதிகளுமின்றிக் காணப்படுகின்றன இவை நிவர்த்தி செய்யப்பட வேண்டும்.
மட்டக்களப்பு மக்கள் எவ்வாறான இன்னல்களுக்கு மத்தியில் வாழ்வைக் கொண்டு செல்கின்றார்கள் என்பதை தற்போது அமைச்சர் விஜயகல மகேஸ்வரன் நேரடியாக உணர்ந்திருப்பார்.
நான் 25 வருடகாலமாக நேரடி அரசியலில் ஈடுபட்டிருக்கின்றேன். பட்டிருப்புத் தொகுதியை அபிவிருத்தி செய்வதற்கு பல செயற்பாடுகளை மேற்கொண்டுள்னே. தற்போது இப்பகுதியில் வேலையில்லாப் பிரச்சனை, விவசாயிகளின் பிரச்சனை என பல பிரச்சனைகளுக்கு மக்கள் முகம் கொடுத்து வருகின்றார்கள். ஆயிரக்கணக்கான விதைகள் பல பிரச்சனைகளை எதிர் கொண்டு வருகின்றார்கள்.
என்னிடம் தொழில் வாய்ப்பு பெற்றுத்தாருங்கள் என அனேகம் பேர் வருகின்றார்கள் இந்த அரசாங்கத்தினால் வேலைவாய்ப்பு வழங்குவது மிகவும் கஸ்ட்டமாக இருக்கின்றது. பட்டதாரிகளுக்கு நியமனங்கள் வழங்கப்படுகின்றன, போட்டிப் பரீட்சைகள் மூலம் சில தொழில் வாய்ப்புக்கள் வழங்கப்படுகின்றன இந்நிலையில் என்னால் வேலைவாய்ப்பு விடையத்தில் ஒன்றும் செய்ய முடியாதுள்ளது. இவ்வாறு பரிதாபகரமான நிலமையில்தான் இப்பகுதி மக்கள் வாழ்கின்றார்கள், மூன்று வேளையும் உண்பதற்குக்கூட வசதி இல்லாத ஆனேக குடும்பங்கள் இன்றும் கஸ்ற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
அரச தொழில் வாய்ப்புக்களை வழங்கி இங்குள்ள வேலைவாய்ப்புப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முடியாது மாறாக தொழிற்சாலைகளை நிறுவி அதன் மூலம் வேலை வாய்ப்புக்களைப் பெற்றுக் கொடுக்க வேண்டும். வர்த்தக வாணிபத்துறை அமைச்சினூடாக சில தொழிற் பேட்டைகளை இப்பகுதியில் நிறுவுவதற்கு நாம் உத்தேசித்துள்ளோம். அடுத்த வருடம் இப்பகுதியிலுள்ள அனேக இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும்.
எனவே இங்கு வந்துள்ள இராஜாங்க அமைச்சர் விஜயகல மகேஸ்வரன் அமைச்சரும் இங்குள்ள மக்களுக்கு உதவுவதற்கு முன்வர வேண்டும் என மேலும் அவர் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment