மட்டக்களப்பு ஏறாவூர் நகரை “போதையற்ற இளைஞர் சமுதாயம் வாழும் பிரதேசமாக” மாற்றியமைக்கும் போதையொழிப்பு விஷேட வேலைத் திட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை (ஒக்ரோபெர் 21, 2016) போதையொழிப்புக்காக
மாபெரும் விழிப்புணர்வு நிகழ்வொன்றை ஏற்பாடு செய்துள்ளதாக பள்ளிவாசல்கள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் அறிவித்துள்ளது.
கொழும்பு மட்டக்களப்பு நெடுஞ்சாலை ஏறாவூர் நகரத்தில் காலை 9 மணிக்கு இந்த கையெழுத்து பெறும் நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.
ஏறாவூர் நகர பிரதேச செயலகம், ஏறாவூர் பொலிஸ் நிலையம், பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம், ஏறாவூர் நகர சபை, ஏறாவூர் பள்ளிவாசல்கள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் என்பன இணைந்து இந்த போதைப் பொருள் பாவனைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்வுகளை நடாத்தி வருவதாக பள்ளிவாசல்கள் சம்மேளன செயலாளர் ஏ.சி.எம். ஷயீட் தெரிவித்தார்.

0 Comments:
Post a Comment