(க.விஜி)
மட்டக்களப்பு மெதடிஸ்த மத்தியகல்லூரியின் பயிற்றப்பட்ட ஆசிரியை (சமூகக்கல்வி) இலங்கை ஆசிரியர் தரப்படுத்தலில் தரம்1 திருமதி யோகேஸ்வரி அல்பேர்ட் அவர்கள் முப்பத்தெட்டு
வருடமாக ஆசிரியப்பணியை சிறப்பானமுறையில் ஆற்றிவிட்டு தனது ஆறுபதாவது அகவையில் கடந்த வெள்ளிக்கிழமை(31.09.2016) ஓய்வுபெற்றுள்ளார்.
1.10.1956 இல் தலவாக்கலையில் பிறந்து வளர்ந்தவர். க.பொ.த (உ./த) வரையும் படித்தவர்.
2.5.1979 திகதியன்று முதன்முதலில் ஆசிரியப்பணிக்காக லுணுகலை அரவாத் கும்புற வித்தியாலய பாடசாலையில் இணைந்துகொண்டார். "நல்ல மாணவர்களை உருவாக்க வேண்டும்" எண்ணத்தை திண்ணமாக்கிக் கொள்ள துணிவுடன் செயற்பட்டார் அல்பேர்ட் ஆசிரியை அவர்கள்.மனோபலமும், இறைவனின் ஆசியும் இவ்வாசிரியை கற்றல்கற்பித்தலுக்கு உறுதுணையாக இருந்தது.
தனது அறிவுப்பலத்தால் மற்றமாணவர்களை கவர்ந்திழுத்து படிப்பிக்கும் வல்லமையுண்டு. அதன்பின்பு தலவாக்கலை அரசினர் ஆசிரியர் கலாச்சாலையில் மூன்றுவருடம் சிங்களமொழி விரிவுரையாளராக கடமையாற்றினார்.அங்கிருந்து வாழ்க்துணை நிமித்தமாக கிழக்கு மாகாணத்தில் உள்ள மட்டக்களப்பு மாவட்டத்திற்கு இடமாற்றப்பட்டார்.
இவர் மட்டக்களப்பில் உள்ள பல இடங்களிலும் கடமையாற்றினார்.இன,மத,மொழி கடந்து மாணவர்களை அரவணைத்து கல்விப்பசியை மாணவர்களுக்கு "பசுமரத்தாணி போல்" ஊட்டினார்.படிப்பித்த பாடசாலைக் காலங்களில் மகத்துவமான ஆசிரியர்ளையும், ஏனைய உத்தியோகஸ்தர்களையும் பதவி,கௌரவம் என்பனவற்றை மறந்து "மனிதநேயமுள்ள மனிதராக" மதிக்கும் பண்பு உள்ளத்தில் வெள்ளைபூவாக பூக்கின்றது.
இதுதான் இவ்வாசிரியையின் உயர்ந்த பண்பாகும்.அதுமட்டுமல்லாமல் ஆசிரியர்பணிக்குரிய அத்தனை சிறப்புக்களும் உண்டு.குறிப்பாக நோக்கும் போது பெருமைத்தனம் இல்லாத எளிமையான ஆசிரியை ஆவர்.மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலகத்தின் மூன்று வருடமாக சிங்கள மொழிபெயர்ப்பாளராக கடமையாற்றியுள்ளமை மேலதிக கடமையாகும்.
0 Comments:
Post a Comment