15 வருடங்களின் பின்னர் மட்.பட்.களுதாவளை மகாவித்தியாலயம் தேசியமட்ட விளையாட்டுப் போட்டியில் சாதனை படைத்துள்ளது.
பாடசாலைகளுக்கிடையிலான 32 வது தேசிய விளையாட்டு விழா கண்டி போகம்பறை மைதானத்தில் 13 ஆம் திகதியிலிருந்து நடைபெற்று வருகின்றது. இந்நிகழ்வு எதிர்வரும் 17 ஆம் திகதி நிறைவு பெறவுள்ளது.
இவ்விளையாட்டு விழாவில் கலந்து கொண்ட மட்.பட்.களுதாவளை மகாவித்தியாலய மாணவன் ஜெயரெட்னம்-ரிசானன் குண்டு எறித்தல் போட்டியில் கலந்து கொண்டு 13.70 மீற்றர் தூரம் எறிந்து முதலாம் இடத்தைப் பெற்று தங்கப்பதக்கத்தை வென்றுள்ளதாக கண்டி போகம்பறை மைதானத்திலுள்ள களுதாவளை மகாவித்தியாலய உடற்கல்வி ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
0 Comments:
Post a Comment