கிழக்கின் இளைஞர் முன்னணியினர் ஏற்பாடு செய்திருந்த கல்விப் பொதுத் சாதாரண தர மாணவர்களிற்கான இலவசக் கல்விக் கருத்தரங்கின் 5 வது தொடர் சனி
மற்றும் ஞாயிறு (24,25) ஆகிய இரு தினங்களிலும் மட்.வெல்லாவெளி கலைமகள் வித்தியாலயத்தில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மாணவர்களின் கல்வி அடைவ மட்டத்தை படியுயர்த்தும் நோக்கில் கிழக்கின் இளைஞர் முன்னணியின் தலைவரும், தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரச கருமமொழிகள் அமைச்சின் பிரதிப் பணிப்பாளருமான கணேசமூர்த்தி கோபிநாத்தின் திட்டமிடனில் இக்கல்விக் கருத்தரங்குகள் நடைபெற்று வருகின்றன.
மட்டக்களப்பு பட்டிருப்புக் கல்வி வலயத்திற்குட்பட்ட படுவான்கரைப் பிரதேசத்தில் காணப்படும் திக்கோடை, மண்டூர், தும்பங்கேணி, வெல்லாவெளி, கணேசபுரம, கோவில்போரதீவு, பழுகாமம், களுமுந்தன்வெளி, ஆகிய பிரதேசபாடசாலைகளில் கல்விப் பொதுத்தர சாதாரணதரத்தில் கல்வி பயிலும் சுமார் 300 இற்கு மேற்பட்ட மாணவர்களினை
தமிழ், வரலாறு, விஞ்ஞானம், ஆங்கிலம், ஆகிய பாடங்களுக்கான கருத்தரங்குகள் நடைபெற்றன.
இப்பகுதி மாணவர்கள், பூரணமான கல்வி வளத்தினைப்பெற பாரிய சிக்கல்களுக்கு முகம்கொடுப்பதுடன் பல தடைகளும் காணப்படுகின்றன. இதனைக் களைந்தெறிந்து கல்வியில் சிறந்த எம் சமூகத்தினை உருவாக்கி எமது தமிழ் சமூகத்தின் நிலையினை உயர்த்த வேண்டும் என்ற அவாவுடன் இலவசமாக இப்பகுதி மாணவர்களுக்கு இவ்வாறாக கருத்தரங்குகளை மேற்கொண்டு வருகின்றோம், இவ் இலவசக் கல்விக் கருத்தரங்குத் திட்டத்தினை வெற்றிகரமாக செயற்படுத்திக் கொண்டிருக்கின்றோம். எனவே மாணவர்களின் காலடியில் சிறந்த வளவாளர்களைக் கொணர்ந்து தருகின்றோம், இதற்கான பிரதியுபகாரமாக மாணவர்களிடமிருந்து, சிறந்த பெறுபேறுகளை நாம் எதிர்பார்க்கின்றோம். இவ்வாறான சந்தர்ப்பங்களை சிறந்த முறையில் மாவர்கள் பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என கிழக்கின் இளைஞர் முன்னணியின் தலைவரும், தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரச கருமமொழிகள் அமைச்சின் பிரதிப் பணிப்பாளருமான கணேசமூர்த்தி கோபிநாத் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment