பயன்படுத்தப்படாமல் பாழடைந்து கிடக்கின்ற நிலத்தைப் பயன்படுத்தி நன்மையடைய வேண்டும் என ஏறாவூர் நகர பிரதேச செயலக காணிப் பயன்பாட்டு திட்டமிடல் உத்தியோகத்தர் மல்லிகா தாஹிர் (Land Use Planning Officer
Mallika Thahir )
தெரிவித்தார்.
ஏறாவூர் நகர பிரதேச செயலக காணிப் பயன்பாட்டுப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட கிராம காணிப்பயன்பாட்டு விழிப்புணர்வுக் கூட்டம் ஏறாவூர் முஹாஜிரீன் கிராமத்தில் செவ்வாய்க்கிழமையன்று (செப்ரெம்பெர் 06, 2016) இடம்பெற்றது.
இந்நிகழ்வில் முஹாஜிரீன் கிராமத்திலுள்ள கிராம காணிப்பயன்பாட்டாளர்கள் மத்தியில் மேலும் உரையாற்றிய காணிப்பயன்பாட்டு உத்தியோகத்தர் மல்லிகா@ தமது நிலத்தை எவரும் பயன்படுத்தாமல் வெறுமனே கட்டாந்தரையாக விட்டுவிடக் கூடாது என்ற காணிப்பயன்பாட்டுத் திணைக்களத்தின் நோக்கத்திற்கமைவாக காணிப்பயன்பாட்டுத் திணைக்களம் ஏற்கெனவே பல்வேறு வகையான திட்டங்களை அமுல்படுத்தி வருகின்றது.
விழிப்புணர்வுப் பயிற்சிகள், கள விஜயங்கள், வீட்டுத் தோட்டம், நிலையான பயிர்களை வளர்த்தல், நிலத்தை முழுமையாகப் பயன்படுத்துதல். இயற்கை வனப்பை அதிகரித்தல், இயற்கைப் பசளை உற்பத்தி, மூலிகைத் தாவரங்களை வளர்த்தல், உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்கள் இதிலடங்கும்.
நிலத்தை வெறுமனே பராமரிக்காது விட்டுவிடுவதால், அது பிரயோசனமற்று விடுவதோடு சூழலுக்கும் தீங்காய் அமைந்து விடுகின்றது.
எனவே, நிலத்தை உச்சமட்டத்தில் பயன்படுத்தி அதன் மூலம் சுற்றுச்சூழலை தூய்மையாகப் பேணுவதோடு பொருளாதார வளத்தையும் ஈட்டிக் கொள்ளலாம், மேலும் நமது சொந்த நிலங்களில் இயற்கை விவசாயத்தை மேற்கொண்டு நஞ்சற்ற உணவுப் பொருட்களை உற்பத்தி செய்து உண்பதன் மூலம் ஆரோக்கியத்தையும் பேணிக் கொள்ளலாம்.
நிலத்தை தூய்மையாகப் பராமரிப்பதன் மூலம் டெங்கு போன்ற கொடிய உயிர்க்கொல்லி நோயிலிருந்தும் பாதுகாத்துக் கொள்ளலாம்.
இந்தத் திட்டம் இன்றோ அல்லது நாளையோ முடிந்து விடப் போவதில்லை.
இதனை நல்ல முறையில் அமுல்படுத்தினால் அதன் மூலம் வீட்டுப் பொருளாதாரமும், ஆரோக்கியமும், சூழலின் தரமும் நாட்டின் பொருளாதாரமும் மேம்படும்.
இந்தத் திட்த்தின் கீழ் நாம் தெரிவு செய்துள்ள ஒவ்வொரு வீடுகளும், வீட்டுச் சுற்றாடலிலுள்ள நிலமும் ஜீபிஎஸ் மூலம் கண்காணிக்கப்படுகின்றது.
எனவே, இந்தத் திட்டத்தின் மூலம் குறிப்பாக கிராம மக்கள் சிறந்த பயனைப் பெறவேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.” என்றார்.
இந்நிகழ்வில் பயனாளிகளுக்கு இலவசமாக பயன்தரும் நீண்ட கால மற்றும் குறுகிய கால மரங்களும், இயற்கைப் பசளையும் விநியோகிக்கப்பட்டது.
0 Comments:
Post a Comment