16 Sept 2016

மட்டக்களப்பில் சாரதி வெட்டி கொலை

SHARE
மட்டக்களப்பு ஆனந்தா ஒழுங்கையில் வைத்து நேற்று இரவு சாரதி ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.

சோமசிறி விஜித் ஜெயந்த் (வயது 34)
என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளதாக  மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் சென்றவரை பின்தொடர்ந்த இருவர், இவரை வெட்டி கொலைசெய்துவிட்டு தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இருவர்  ஒரு மணி நேரத்தில் மட்டகளப்பு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

SHARE

Author: verified_user

0 Comments: