இளவயது திருமணத்தினை தடுக்கும் முகமாக மாணவர்களைத் தெளிவூட்டும் விழிப்புணர்வு கருத்தரங்கு வெல்லாவெளி பிரதேச சுகாதார வைத்திய
அதிகாரி காரியாலயத்தின் ஏற்பாட்டில் பழுகாமம் கண்டுமணி மகாவித்தியாலயத்தில் அதிபர் சு.உதயகுமார் தலைமையில் வியாழக்கிழமை(29) நடைபெற்றது.
இதன் போது மாணவர்களுக்கு இளவயது திருமணத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புக்கள் சம்பந்தமாகவும், அதனை தடுப்பதற்கான நடவடிக்கைள் போன்னறவை சம்பந்தமாகவும் இக்கருத்தரங்கின் ஊடாக மாணவர்களுக்கு தெளிவாக எடுத்துரைக்கப்பட்டது.
போசனை தொடர்பான கருத்துக்களும் முன்வைக்கப்பட்டது. இதற்கான விரிவுரைகளை வெல்லாவெளி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வே.குணராஐசேகரம் அவர்கள் நிகழ்த்தினார்.
0 Comments:
Post a Comment