மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலக்திற்குட்பட்ட கல்லடி விவேகானந்தா மகளிர் மகாவித்தியாலயத்தின் "வருடாந்த பரிசளிப்பு விழா" வெள்ளிக்கிழமை
(30) பிற்பகல் 2.30 மணியளவில் அதிபர் திருமதி திலகவதி ஹரிதாஸ் தலைமையில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்றஉறுப்பினர் எஸ்.வியாளேந்திரன் அவர்களும்,விஷேட அதிதிகளாக மட்டக்களப்பு வலயக் கல்விப்பணிப்பாளர் கே.பாஸ்கரன், பிரதி பிரதம செயலாளர் காரியாலயத்தின்
(நிருவாகம்) கணக்காளர் திருமதி காஞ்சனாதேவி அரவிந்தன் ஆகியோர்களும்,கௌரவ அதிதிகளாக மண்முனை வடக்கு கோட்டக் கல்விப்பணிப்பாளர் ஏ.சுகுமாரன், கல்லடி பேச்சியம்மன் ,சித்திவிநாயக ஆலய பரிபாலனசபைத்தலைவர் எஸ்.சந்திரகுமார் ஆகியோர்களும் கலந்துகொள்ளவுள்ளார்கள்.
இதன்போது சுமார் 400 மாணவிகள் இணைப்பாடவிதானச்
செயற்பாடுகள்,விளையாட்டுப் போட்டிகள்,அகில இலங்கை தமிழ்தினப்போட்டிகள் போன்றவற்றில் வெற்றியீட்டிய மாணவிகள் பரிசளிப்புக்களை பெறவுள்ளார்கள்
என அதிபர் திருமதி திலகவதி ஹரிதாஸ் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment