சட்ட விரோதமாக மர அரிவு ஆலைக்குக் கொண்டு வரப்பட்ட ஒரு தொகுதி வேம்பு மரக் குற்றிகளை தாம் கைப்பற்றியிருப்பதாக
ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
சட்டவிரோதமான முறையில் மரங்கள் கடத்தப்படுவதாக பொதுமக்களிடமிருந்து கிடைத்த தகவலையடுத்து பொலிஸார் ஏறாவூர் நகரில் தேடுதல் நடத்திய பொழுது சனிக்கிழமை (செப்ரெம்பெர் 10, 2016) இந்த மரங்கள் சிக்கியுள்ளன.
வாகனமொன்றில் ஏற்றப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 10 அடி நீளமான 14 மரக்குற்றிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதோடு அதனைத் ஏற்றிவந்து தம்வசம் மறைத்து வைத்திருந்த ஏறாவூர் காயர் வீதியைச் சேர்ந்த 32 வயதுடைய நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைப்பற்றப்பட்ட மரங்கள் எறாவூர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளன. சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர் செய்யவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம்பற்றி ஏறாவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
0 Comments:
Post a Comment