மட்டக்களப்பு மாவட்டம் மைலம்பாவெளி இராம் நகரில் அமைந்துள்ள மிகவும் பிரசித்தி வாய்ந்த ஸ்ரீ காமாட்சி அம்பாள் தேவஸ்தான ஸ்ரீ ருத்திர பாராயண ஹோம பொருவிழா மஹாளய பசஷம்.
பரலோக ப்ராப்தி (அமரத்துவம்) அடைந்த முன்னோர்களின் ஆத்ம ஈடேற்றத்திற்காக ஸ்ரீ காமாட்சி அம்பாள் தேவஸ்தானத்தில் விஷேட அபிஷேகமும் ஸ்ரீ ருத்திர பாராயணமும் நடைபெற்று வருகின்றது.
கடந்த 17 ஆம் திகதி சனிக்கிழமை முதல் நடைபெற்று வரும் இவ்விஷேட பூஜை எதிர் வரும் 30 ஆம் திகதியுடன் நிறைவு பெறவுள்ளது.
மஹாயள பட்சஷத்தை உண்ணாமுலை அம்பிகை சமேத ஸ்ரீ அண்ணாமலையாருக்கு தினமும் காலை 10 மணிமுதல் விஷேட அபிஷேகமும், ஸ்ரீ ருத்திர பாராயணமும், விசேட பூஜையும் நடைபெற்று வருகின்றன.
இறுதிநாளான எதிர் வரும் 30 ஆம் திகதி காலை 10 மணிக்கு பூர்த்தி ஏகாதசி ருத்திர ஹோமம், ப்ரத்யங்கிராதேவி ஹோமும் நடைபெறவுள்ளதாக ஆலய நிருவாகம் அறிவித்துள்ளது.
0 Comments:
Post a Comment