21 Sept 2016

புதுக்குடியிருப்பில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 26 வது ஆண்டு நினைவு தினம் அனுஸ்ட்டிப்பு.

SHARE
மட்டக்களப்பு – புதுக்குடியிருப்பில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 26 வது ஆண்டு நினைவு தினம் உணர்வு பூர்வமாக புதன் கிழமை (21) காலை அனுஸ்ட்டிக்கப்பட்டது.
1990 ஆம் ஆண்டு செப்டம்பர் 21 ஆம் திகதி புதுக்குடியிருப்புக் கிராமத்திற்குள் புகுந்த முஸ்லிம் ஊர்காவல்படையினர் சுட்டும் வெட்டியும் கொன்று குவித்துள்ளனர். இதில் சிறுவர்கள், பெரியவர்கள், வயது முதிந்தவர்கள் என 17 இறந்தும், 28 படுகாயமும் அடைந்துள்ளனர்.

இறந்தவர்களின் ஆத்மா சாந்தி வேண்டி புதுக்குடியிருப்பு பிள்ளையார் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றதோடு, பாலர்பாடசாலையில், இரத்ததான நிகழ்வும் நடைபெற்று பின்னர் இறந்தவர்களின் பெயர் பெறிக்கப்பட்ட ஞாபகார்த்த தூபியில் நிறைவுச்சுரரேற்றி அனுஸ்ட்டித்தனர்.

இந்நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராசசிங்கம், மற்றும் பிரதித்தவிசாளர் இ.பிரசன்ன, உறுப்பினர்களான கோ.கருணாகரம், மா.நடராசா, இரா.துரைரெத்தினம், ஞா.கிருஸ்ணபிள்ளை இளைஞர் அணித்தலைவர் கி.சேயோன் மற்றும், இறந்தவர்களின் உறவினர்கள், கிராம பெரியோர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டிருந்ததோடு, நினைவுரைகளும் நடைபெற்றன.




























SHARE

Author: verified_user

0 Comments: