கிழக்கு பல்கலைக்கழகத்தின் 20 வது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை (செப்ரெம்பெர் 10, 2016) கிழக்கு பல்கலைக் கழகத்தின் நல்லையா மண்டபத்தில் நடைபெற்றது.
உபவேந்தர் கலாநிதி தங்கமுத்து ஜயசிங்கம் பட்டங்களுக்கான அங்கீகாரத்தினை வழங்கியதுடன் பட்டங்களையும் வழங்கி வைத்தார்.
இந்நிழ்வில் பதிவாளர், பீடாதிபதிகள், துறைத்தலைவர்கள், சிரேஷ்ட விரிவுரையாளர்கள், விரிவுரையாளர்கள் மாணவர்கள், பெற்றோர் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
நான்கு கட்டங்களாக இந்த பட்டமளிப்பு விழா இடம்பெற்றது.
மொத்தமாக பல்வேறு துறைகளையும் சேர்ந்த 893 பேர் பட்டம் பெற்றுக் கொண்டனர்.
இதில் கிழக்குப் பல்கலைக் கழக முன்னாள் தகுதி வாய்ந்த அதிகாரி உமா குமாரசுவாமி அபவர்களுக்கு விஞ்ஞானமானி கலாநிதிப் பட்டம் பட்டம் வழங்கப்பட்டது.
மேலும், பல்கலைக் கழகத்தில் சிறப்பாக செயற்பட்ட நான்கு மாணவர்களுக்கு தங்க விருதுகளும் மற்றும் 30 பேருக்கு பணப் பரிசுகளும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்
0 Comments:
Post a Comment