மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி-06, டீன் வீதி, ஹைராத் பள்ளி பகுதியில் 10 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் 42 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரை திங்களன்று (26.09.2016) கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
பாதிப்புக்குள்ளானதாக கூறப்படும் குறித்த சிறுமி வைத்திய பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இச்சம்வவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
0 Comments:
Post a Comment