மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்திற்கு உட்பட்ட பொதுச்சுகாதார பரிசோதகர்கள் ஒன்றிணைந்து களுவாஞ்சிகுடி
பொதுச் சந்தையில் தீடிர் சோதனை நடவடிக்கை ஒன்றினை திங்கட் கிழமை (15) முன்னெடுத்து இருந்தனர்.
இதன் போது மீன், இறச்சி, முட்டை விற்பனை நிலையங்களே சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
மீனின் மேல் மண்ணிட்டு விற்பனை செய்தல், மீன்களை நீருக்குள் தேக்கிவைத்து விற்பனை செய்தல், ஒரு மீனின் இரத்தினை இன்னொரு மீனுக்கு பூசி விற்பனை செய்தல் போன்ற சுகாதார முறைகேடான நடவடிக்கைகளை விற்பனையின் போது மீன் வியாபாரிகள் மேற்கொண்டு வருவதாக பொதுமக்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைவாகவே குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக நடவடிக்கைக்கு பொறுப்பான பொதுச் சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.
இதன் போது பல மீன், இறைச்சி வியாபரிகளுக்கு ஆலோசனை வழங்கியதுடன் இந் நிலை தொடர்ந்தால் சம்பந்தப்பட்ட வியாபாரிகள் மீது வழக்குத் தொடரப்படும் என எச்சரிக்கையையும் விடுக்கப்பட்டதாக மேலும் அவர் தெரிவித்தார்
0 Comments:
Post a Comment