மட்டக்களளப்பு மாவட்டத்திலுள்ளதும், அம்பாi மாவட்டத்தின் அருகில் அமைந்துள்ளதுமான துறைநீலாவணைக் கிராமத்தின் பொலிஸ் நடவடிக்கைகளை அம்பாறை மாவட்டத்திற்குள் வரும் அருகிலுள்ள கல்முனை பொலிஸ் பிரிவுக்குள் இணைக்குமாறு கோரி
வர்த்தக வணிகத்துறை அமைச்சின் நுண்கலை தொழிநுட்ப சிரேஷ்ட ஆலோசகர் சோமசுந்தரம் கணேசமூர்த்தி ஊடாக பிரதமருக்கு மகஜர் ஒன்றினை துறைநீலாவணை ஐக்கிய தேசியக் கட்சி அலுவலகம் திங்கட் கிழமை (15) அனுப்பியுள்ளது.
அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது…..
எமது கிராமம் மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைக்குட்பட்ட போதிலும் இங்கு நான்கு கிராம சேவையாளர் பிரிவுகள் உள்ள நிலையில் மிக நீண்ட காலமாக பொலிஸ் பிரிவானது கல்முனையின் கீழ் இருந்தது ஆனால் கடந்த ஆட்சியின் போது இக்கிராமத்தினை களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்துடன் இணைத்தனர்.
எமது ஊரிலிருந்து களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்திற்கு செல்வதற்கான தூரம் கல்முனையினை விட அதிகமாவதுடன் கல்முனையில் சந்தை வசதிகள் உட்பட வைத்தியசாலை இ பாடசாலை இ வர்த்தக நிலையங்கள் இ தனியார் கல்வி நிலையங்கள் போக்குவரத்து வசதிகள் என்பன தாராளமாக உள்ளன.
எனவே எமது துறைநீலாவணைக் கிராமத்தினை மக்களின் நலன் கருதி கல்முனைப் பொலிஸ் நிலையத்தோடு மீண்டும் இணைப்பதற்கு ஆவண செய்து தரும் படி வேண்டிக் கொள்கின்றோம். என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment