காத்தான்குடி கலாச்சார மண்டபத்திற்கு முன்னாலுள்ள பிரதான வீதியில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் முச்சக்கரவண்டியைச் செலுத்திச் சென்ற காத்தான்குடி நகர பிரதேசத்தைச் சேர்ந்த ஏ. அப்துல் லத்தீப் (வயது - 53) என்பவரே படுகாயங்களுக்குள்ளான நிலையில் காத்தான்குடி ஆதார வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முச்சக்கரவண்டி வேகக் கட்டுப்பாட்டை இழந்து பிரதான வீதியின் நடுவிலுள்ள கொங்கிறீற் கட்டில் மோதியதில் முச்சக்கரவண்டியும் முற்றாகச் சேதமடைந்துள்ளது.
சம்பவம் தொடர்பாக காத்தான்குடி பொலிஸார் மேலும் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
0 Comments:
Post a Comment