மட்டக்களப்பு மாவட்டம், வடமுனை கிராமஅபிவிருத்திச் சங்கத்தினரின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாண விவசாய அமைச்சருடனான
மக்கள் சந்திப்பு நிகழ்வு சனிக்கிழமை வடமுனை கிராம அபிவிருத்திச் சங்கக் கட்டிடத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் வடமுனை கிராமஅபிவிருத்திச் சங்கத்தினரின் வேண்டு கோளுக்கிணங்க கிழக்கு மாகாணவிவசாய அமைச்சரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமாகிய கிருஸ்ணபிள்ளை-துரைராசசிங்கம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டதுடன், அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் தங்கவேல், வடமுனைகிராம அபிவிருத்திச் சங்கத்தின் உறுப்பினர்கள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போதுஅமைச்சரினால் கிராமத்தில் நிலவுகின்ற மக்கள் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயப்பட்டதுடன், அமைச்சரின நிதி ஒதுக்கீட்டின் மூலம் வடமுனை கிராம அமைப்புகளுக்கு துவிச்சக்கரவண்டிகளும் வழங்கிவைக்கப்பட்டன.
மேலும் விவசாயிகளின் வேண்டு கோளுக்கிணங்க வடமுனை பெட்டைக் குளத்திற்குச் சென்றுஅதன் நிலைப்பாடுகள் தொடர்பிலும் பார்வையிட்டார். அத்துடன் அமைச்சரின் முயற்சியினாலும் நிதிஒதுக்கீட்டின் மூலமும் திருத்தியமைக்கப்பட்ட வடமுனை வீதியிழனயும் அமைச்சர் சென்றுபார்வையிட்டமையும் குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment