4 Jul 2016

களுதாவளை சுயம்பு லிங்கப் பிள்ளையார் ஆலய வருடாந்த அலங்கார உத்சவத்தின் மூன்றாம் நாள் திருவிழா (வீடியோ)

SHARE
மட்டக்களப்பு களுதாவளை சுயம்பு லிங்கப் பிள்ளையார் ஆலய வருடாந்த அலங்கார உத்சவத்தின் மூன்றாம் நாள் திருவிழா ஞாயிற்றுக் கிழமை (03) இரவு நடைபெற்றது. 
மூல மூர்த்திக்கு பூஜைகள் இடம்பெற்று பின்னர் வசந்த மண்டப பூஜைகள் நடைபெற்றதைத் தொடர்ந்த சுவாமி உள்வீதி வலம் வந்து. 

பிள்ளையார் மூசுக வாகனத்திலும், சிவபெருமானும் பாதிவதி தேவியும், இடப வாகனத்திலும், முருகப்பெருமானும் வள்ளி, தெய்வயானை சமேதராய் மயில் வாகனத்திலும், சுவாமி வெளிவீதி வலம்வந்தது. இதன்போது பக்தர்கள் கற்பூரச்சட்டி ஏந்தியும், அங்கப் பிரதட்சனை செய்தும், தமது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினர்.

பூஜைக் கிரியைகள் யாவும், ஆலய பிரதம குரு சிவ ஸ்ரீ சு.கு.விநாயகமூர்த்திக் குருக்கள் தலைமையில் நடைபெற்றன.

கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பமாதக இத்திருவிழா எதிர்வரும் 10 ஆம் திகதி காலை நடைபெறவுள்ள தீர்த்தோற்சவத்துடன் நிறைவு பெறவுள்ளது.

















SHARE

Author: verified_user

0 Comments: