மட்டக்களப்பு - காத்தான்குடி ஆறாம் குறிச்சி பிரதான வீதியில் முச்சக்கரவண்டியும் துவிச்சக்கரவண்டியும் வியாழக்கிழமை (ஜுலை 07, 2016) மோதி விபத்துக்குள்ளானதில்
ஒருவர் படுகாயங்களுக்குள்ளானதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
மாலை 3 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் துவிச்சக்கரவண்டியை செலுத்திச் சென்ற ஆரையம்பதி பிரதேசத்தைச் சேர்ந்த எஸ். மோகனசுந்தரம் (வயது - 45) என்பவரே படுகாயங்களுக்குள்ளான நிலையில் ஆரையம்பதி மாவட்ட வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பிலிருந்து கல்முனை நோக்கி பயணித்த அக்கரைப்பற்று பிரதேசத்தைச் சேர்ந்த முச்சக்கரவண்டி துவிச்சக்கர வண்டியுடன் பின்னால் மோதியே விபத்து நிகழ்ந்துள்ளது.
சம்பவ இடத்துக்கு விரைந்த காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
முச்சக்கரவண்டியைச் செலுத்திச் சென்றவர் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.
0 Comments:
Post a Comment