4 Jul 2016

பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு விவசாய உதவிகள் வழங்கிவைப்பு

SHARE

கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கிருஸ்ணபிள்ளை துரைராஜசிங்கத்தின், தனிப்பட்ட நிதியின் கீழ் பெரியபோரதீவுக் கிராமத்தில் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களின் சுயதொழில் ஊக்குவிப்பு கருதி பொருட்கள் வழங்கும் நிகழ்வு பெரியபோரதீவு கிராம அபிவிருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில் திங்கட் கிழமை (04) இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண விவசாய அமைச்சரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமாகிய கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் கலந்து கொண்டதுடன், விவசாய அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் தங்கவேல், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பட்டிருப்புத் தொகுதிக்கிளைச் செயலாளர் ந.துஸ்யநதன், மற்றும் பெரியபோரதீவு கிராம அபிவிருத்திச் சங்கம் பிரதிநிதிகள், பெண்கள் தலைமைதாங்கும் குடும்பங்களின் பெண்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

பெரியபோரதீவு கிராம அபிவிருத்திச் சங்கத்தினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கிணங்கள் மேற்படி அமைச்சர் அவரது தனிப்பட்ட நிதியில் இருந்து கிராம அபிவிருத்திச் சங்கத்தினரால் தெரிவு செய்யப்பட்ட 10 பேருக்கு ஒவ்வொருவருக்கும், தலா, 4000 ரூபா பெறுமதியான பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன. இவ்வாறு மேலும் பல  இடங்களில், அமைச்சரினால், இவ்வாறான உதவிகள் வழங்கும் செயல்பாடுகள் முன்னெடுக்கப் பட்டுள்ளமையும், குறிப்பிடத்தக்கது. 

























SHARE

Author: verified_user

0 Comments: