10 Jul 2016

தொழில் முயற்ச்சியாளர்களுக்கான இயற்கை முறை விவசாய செய்கை தொடர்பான பயிற்சி

SHARE
தெரிவு செய்யப்பட்ட தொழில் முயற்ச்சியாளர்களுக்கான இயற்கை முறை விவசாய செய்கை தொடர்பான பயிற்சி வழங்கும் நிகழ்வு, வாகரை பிரதேச விவசாய விரிவாக்கல் அலுவலகத்தில்; நடைபெற்றது. 
சிறுதொழில் முயற்சியாண்மை மற்றும் மாற்று வாழ்வாதார மார்க்கங்களை ஊக்குவித்தலுக்கான செயற்றிட்டத்தின்கீழ் கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் தெரிவுசெய்யப்பட்ட 21 இயற்கைமுறை பயிர் செய்கையினை மேற்கொள்ளும் தொழில் முயற்ச்சியாளர்களுக்கே இப்பயிற்சி நடைபெற்றது.

மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சின் கீழ் செயற்படும் கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூல வளங்கள் முகாமைத்துவத் திணைக்களத்தினால் செயற்படுத்தப்படும் பங்குபற்றலுடன் கூடிய நீடித்து நிலைத்திருக்கத்தக்க கரையோர வலய மீளமைப்பு நிகழ்ச்சிதிட்டத்தின் கீழ் நெசட் வியாபார அபிவிருத்தி ஆலோசனை அமைப்புடன் இணைந்து இப்பயிற்சி நடைமுறைப் படுத்தப்படுகின்றது.

இந்நிகழ்வில்;, கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூலவளங்கள் முகாமைத்துவ திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட களஇணைப்பாளர் அ.கோகுலதீபன் இநெசட் அமைப்பின் கிழக்கு பிராந்தியநிகழ்ச்சிதிட்ட இணைப்பாளர் செ.ரமேஸ்வரன் மற்றும் செய்யப்பட்டதொழில் முயற்சியாளர்களும் கலந்து கொண்டிருந்தனர். 

இதன்போது இயற்கை முறையில் விவசாயம் செய்தல், இயற்கை முறையில் கூட்டுப்பசளை தயாரித்தல், இற்கை முறை விவசாய உற்பத்திகளை உண்ணுவதனால் உடலுக்கு ஏற்படும் அரோக்கியம் தொடர்பாகவும், செயற்கை முறை அதாவது கிருமிநாசினிகள், பாவிக்கப்பட்ட உணவுகளை உண்பதனால் ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பாகவும் இதன்போது விளக்கமளிக்கப்பட்டதாக இநெசட் அமைப்பின் கிழக்கு பிராந்தியநிகழ்ச்சிதிட்ட இணைப்பாளர் செ.ரமேஸ்வரன் தெரிவித்தார். 


இவ்வியற்கைமுறை விவசாய செய்கை தொடர்பான பயிற்சியினை பிரதேசவிவசாய போதனாசிரியர்களான எஸ்.கண்ணன் மற்றும் ஆர்.துசியந்தி ஆகியோர் வளவாளர்களாகக் கலந்துகொண்டு விளக்கங்களை வளங்கினர்.










SHARE

Author: verified_user

0 Comments: