எதிர்வரும் பத்தாம் திகதி (ஜுலை 10, 2016) காலை மட்டக்களப்பு நகருக்கு ஜனாதிபதி வருகை தரவுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்புக்கு வருகை
தரும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புனர்நிர்மாணம் செய்யப்பட்ட மட்டக்களப்பு வெபர் ஸ்டேடியத்தை திறந்து வைக்கவுள்ளதுடன் மட்டக்களப்பு விமான நிலையத்தில் இடம்பெறும் உள்ளுர் போக்கவரத்திற்காக விமானங்களைக் கையளிக்கும் வைபவத்திலும் கலந்து கொள்ளவுள்ளார்.
கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட்டின் வேண்டுகோளுக்கமைய உள்ளுர் உல்லாசப் பயணத்துறையை விருத்தி செய்வதற்காக உல்லாசப் பயணிகளுக்கு உள்ளுர் போக்குவரத்தை இலகுபடுத்தும் நோக்கில் இரண்டு விமானங்கள் மட்டக்களப்பு விமான நிலையத்திற்குக் கையளிக்கப்படவுள்ளன.
இந்த விமானங்கள் தினமும் கொழும்பு – மட்டக்களப்பு- திருகோணமலை பறப்புக்களில் ஈடுபடும் என்று முதலமைச்சர் செயலகம் அறிவித்துள்ளது.
0 Comments:
Post a Comment