மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலயத்தில் கடமை புரியும், கிராம சேவை உத்தியோகஸ்தர் ஒருவர் இலங்கை இராணுவத்தினரால் தாக்கப்பட்டு
வாழைச்சேனை ஆதா வைத்தியாசலையில் அனுமத்திக்கப் பட்டுள்ளதாக கிரான் பிரதேச செயலாளர் கே.தனபாலசிங்கம் புதன் கிழமை (01) தெரிவித்தார்
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது……
மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலகத்திற்குடப்பட்ட புலிபாய்ந்தகல் காட்டுப்பகுதியில் சட்டவிரோத மரம் வெட்டப்படுவதாக தகவல் கிடைத்ததையடுத்து அவ்வடத்திற்கு செவ்வாய்க்கிழமை இரவு இஸ்த்தலத்திற்கு விரைந்த அக்கிராமத்திற்குப் nhபறுப்பான கிராம உத்தியோகஸ்தர் இலங்கை இராணுவத்தினரால் தாக்கப்பட்டுள்ளார். இதில் படுகாயம் அடைந்த கிராம சேவை உத்தியோகஸ்தர் செவ்வாய் கிழமை இரவே வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமத்திக்கப் பட்டுள்ளர்.
இந்நிலையில் இச்சம்பவத்தைக் கண்டித்து புதன் கிழமை (01) கிரான் பிரதேச செயலக உத்தியோகஸ்தர்கள், கிராம சேவை உத்தியோகஸ்தர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பணிப் பகிஸ்க்கரிப்பில் ஈடுபட்டனர்.
இவ்விடத்திற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்ககளான சா.வியாளேந்திரன், சீ.யோகேஸ்வரன், ஞா.சிறிநேசன், மற்றும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான கோ.கருணாகரம், மா.நடராசா, இரா.துரைரெத்தினம், ஆகியோர் வருகை தந்திருந்தனர்.
அரச உத்தியோகஸ்தர்களின் பாதுகாப்பிற்கு அரசாங்கம் பொறுப்புக் கூறவேண்டும், இக்கிராம சேவை உத்தியோக்ஸ்தர் இலங்கை இராணுவத்தினரால் தாக்கப்பட்டமை மிகவும், கண்டிக்கத் தக்கவிடையமாகும், இச்சம்பவத்தில் ஈடுபட்ட இராணுவத்தினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு தாம் முயற்சிப்பதாக இதில் கலந்து கொண்டிருந்த மக்கள் பிரதிநிதிகள் கருத்து தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment