20 Jun 2016

நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசனுக்கு கௌரவிப்பு

SHARE
மட்டக்களப்பு - களுமுந்தன்வெளி ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலய வருடாந்த உற்சவத்தினை முன்னிட்டு களுமுந்தன்வெளி மரபுக் கலை பேணும் இரசியர் புகழ் விநாயகர் கலைக்கழகம் தனது 30 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஞாயிற்றுக் கிழமை
(19) இரவு விநாயகர் கலை அரங்கில் கலை நிகழ்வு மற்றும் சாதனையாளர்களை பாராட்டும் நிகழ்வும் நடைபெற்றது.

இந் நிகழ்விற்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். இதன்போது விநாயகர் கலைக்கழகம் நாடாளுமன்ற உறுப்பினருக்கு பொன்னாடை போர்த்தி, வாழ்த்து மடல் வழங்கி கௌரவிப்பதைப் படத்தில் காணலாம்.







SHARE

Author: verified_user

0 Comments: